உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முஸ்லிம் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை பதியலாம்: மும்பை உயர் நீதிமன்றம்

முஸ்லிம் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை பதியலாம்: மும்பை உயர் நீதிமன்றம்

மும்பை: 'ஒரே நேரத்தில் நான்கு மனைவியருடன் வாழ முஸ்லிம் தனிநபர் சட்டம் உரிமை தருவதால், முஸ்லிம் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம்' என, மும்பை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.மஹாராஷ்டிர மாநிலம், தானேவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞருக்கு ஏற்கனவே இரண்டு மனைவியர் உள்ளனர். இந்நிலையில், அவர் மூன்றாவதாக அல்ஜீரியாவைச் சேர்ந்த பெண்ணை மணந்தார். தங்களின் மூன்றாவது திருமணத்தை பதிவு செய்யக்கோரி, தானே மாநகராட்சி அலுவலகத்தை நாடினார்.மஹாராஷ்டிரா திருமண பதிவு சட்டத்தின் கீழ், மாநகராட்சி அதிகாரிகள் முஸ்லிம் இளைஞரின் மூன்றாவது திருமணத்தை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து அந்த நபர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோலபவல்லா மற்றும் சோமசேகர் சுதர்சன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:முஸ்லிம் தனிநபர் சட்டம் ஒரே சமயத்தில் நான்கு பெண்களை மணக்க அனுமதிக்கிறது. அப்படி இருக்கும் போது, முஸ்லிம் ஆணின் மூன்றாவது திருமணத்தை பதிவு செய்ய மறுப்பது முற்றிலும் தவறானது.இரண்டு வாரத்திற்குள் தேவையான ஆவணங்களை திருமண ஜோடிகள் மாநகராட்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி, 10 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 97 )

Pandi Muni
நவ 20, 2024 20:10

முஸ்லிம்களை பாதுகாக்க தனி நபர் சட்டம் இருக்கும் போது தண்டனை சட்டம் மட்டும் ஏன் முஸ்லிமுக்கு அரேபிய சட்டமாக இருக்க கூடாது?


MOHAMED Anwar
நவ 15, 2024 08:22

வரவேற்புகுறியது, அதன் காரணம் அறிந்து கொடுக்கப்பட்டது, இந்த தீர்ப்பை விமர்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


Natarajan Ramanathan
நவ 02, 2024 23:54

இந்த மாதிரி அபத்தமான தீர்ப்புகளால்தான் மதம் மாறுவது அதிக அளவில் நடக்கிறது.


v j antony
அக் 30, 2024 20:49

நீதிமன்றங்களின் உத்தரவுகள் மிக மிக கவலைக்குரியது ஆண்வர்கத்திற்கு ஆதரவான பழமைவாத சட்டங்கள் இன்னும் உள்ளது என்பதே கண்டனத்திற்குரியது நாடுமுழுவதும் ஒரே சட்டத்தை அமல்படுத்த அரசிற்கு இன்னும் எத்தனைக்காலம் தேவைப்படுகிறது ???


Sathyanarayanan Sathyasekaren
அக் 30, 2024 03:31

எங்கள் ஊரில் ஒரு அரசு அதிகாரி இரண்டாவது திருமணம் செய்து இருந்தார், முதல் மனைவியின் சுற்றத்தாருக்கு தெரிந்தவுடன் பிரச்சனை நீதிமன்ற வழக்கிற்கு செல்ல இருந்தபோது, அவர் முஸ்லிமாக மதம் மாறிவிட்டார். மதம் மாறியவுடன் அரசு பதவி தப்பித்தது.


Narayanan
அக் 29, 2024 14:48

மும்பை உயர்நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பு . பொது சிவில் சட்டம் இன்றியமையாதது .தனிநபர் சட்டம் இனியும் செல்ல அனுமதிக்காதீர்கள் . இந்த தனிநபர் சட்டங்கள் களையப்படவேண்டும்


Mohan
அக் 29, 2024 07:52

முஸ்லிம் சகோதரர்களே பெண்குழந்தைகளை பெற்றவர்களே மனதைத் தொட்டு சொல்லுங்கள், நீங்கள் பெற்று வளர்த்த தங்கங்களை அன்புடன் தானே வளர்த்தீர்கள், அவர்கள் இரண்டாந்தர மனுஷியாக ஒரு ஆணிடம் கேவலப்பட்டு வாழ்வது உங்களுக்கு சம்மதமா? ஒரு தகப்பனாக முடிவெடுங்கள். காலம் மாறிவிட்டதால் சில தனிநபர் முடிவுகள் மாறலாம். அதன் காரணத்தால் தாங்கள் மதத்திற்கு எதிராக நடப்பதாக எண்ண வேண்டாம். அப்படி எண்ணுபவர்களையும் உரைச்சொல்லால் மாற்றலாம். தவறில்லை. கருணை நிறைந்த இறைவன் இதற்கெல்லாம் தண்டிப்பதில்லை. தங்கள் மதத்திற்கு எந்த குறையும் வராது. மாறாக பழங்காலத்திற்கு போகச் சொல்பவர்கள் மன விகாரம் கொண்ட அறிவிலிகளே


S.V.Srinivasan
அக் 28, 2024 10:44

முஸ்லிம்களுக்கு வேறு வேலையே கிடையாதா? எதுக்குஇந்த வேண்டாத தீர்ப்பெல்லாம்.


Tetra
அக் 28, 2024 06:32

கேவலமான நாட்டிற்கு எதிரான உத்தரவு


SIVA
அக் 27, 2024 18:36

இந்த தீர்ப்பு சரி இல்லை , வழக்கை உச்ச நீதி மன்றதிற்கு எடுத்து செல்ல வேண்டும் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை