உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சண்டை இன்னும் முடியல...! மீண்டும் வருவேன் என்கிறார் வினேஷ்

சண்டை இன்னும் முடியல...! மீண்டும் வருவேன் என்கிறார் வினேஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: தமது பதக்க வேட்டை இன்னமும் முடியவில்லை, மீண்டும் யுத்தத்துக்கு தயாராக போவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உறுதிபட கூறியுள்ளார்.

எடையால் தடை

பாரிஸ் ஒலிம்பிக் தொடர் மல்யுத்தம் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எதிர்பாராத இந்த நடவடிக்கையால் அவரது பதக்கம் பெறும் கனவு நிறைவேறாமல் போனது.

உற்சாக வரவேற்பு

ஏமாற்றத்துக்கு ஆளான வினேஷ் போகத், மல்யுத்தத்தில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். பாரிசில் இருந்து தாயகம் திரும்பிய அவருக்கு புதுடில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக ஹரியானா மாநிலத்தில் உள்ள தமது சொந்த கிராமமான, பத்லிக்குச் சென்றார்.

ஆழமான காயம்

அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த ஒலிம்பிக் தொடர் எனக்கு மிகவும் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விட்டது. அந்த காயம் குணம் அடைய சிறிதுகாலம் பிடிக்கும். ஆனாலும் எனது நாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

போராட்டம் தொடரும்

எனது சண்டை இன்னமும் முடியவில்லை. அது ஒரு நீண்ட ஒரு யுத்தம், கடந்த ஒரு வருடமாக போராடி வருகிறேன். அதில் ஒரு பகுதியைத் தான் தாண்டி வந்திருக்கிறேன், போராட்டம் தொடரும் என்று கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kumar Kumzi
ஆக 18, 2024 14:36

வயசாகிடுமேமா பேசாமல் கொங்கிரஸில் இணைந்து கோசம் போடும்மா


enkeyem
ஆக 18, 2024 14:31

முதல்ல உன்னுடைய உடல் எடையை குறைக்கப் பாரு.


முருகன்
ஆக 18, 2024 13:48

ஒலிம்பிக் சங்கம் தகுதி போட்டி நடத்தும் அதில் வெற்றி பெற்று தான் முன்று முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று உள்ளார். வரும் காலங்களிலும் இது நடக்கும் நிச்சயமாக பதக்கம் பெறுவர்


Ramesh Sargam
ஆக 18, 2024 12:59

தேவையான விளம்பரம் கிடைத்துவிட்டது. ஆகையால் மல்யுத்த போட்டியை விட்டுவிட்டு, அரசியல் மல்யுத்த போட்டியில் பங்குகொண்டு வெற்றிவாகை சூடலாம். ஒரு நல்ல அரசியல் கட்சியில் சேர்ந்துவிடு, அதுதான் சரி.


naranam
ஆக 18, 2024 12:46

தயவு செய்து இவரைப் பற்றிய செய்தி வெளியிடுவதை உடனடியாக நிறுத்தவும். தாங்க முடியலடா சாமி!


Sridhar
ஆக 18, 2024 11:50

மூணுதடவ ஹுஹும் ஒரு மெடல் கூட வாங்க முடியல, சரியான ராவுல் கண்டியோட பெண்வடிவமா இருக்குமோ?


Punniyakoti
ஆக 18, 2024 11:09

மறுபடியும் மொதல்ல இருந்தா சாமி


Swaminathan L
ஆக 18, 2024 10:50

மல்யுத்தத்திலிருந்து யுத்தத்திற்கு, யுத்தத்திலிருந்து வெறும் சத்தத்திற்கு.


நிக்கோல்தாம்சன்
ஆக 18, 2024 10:43

தகுதியுள்ளவர்களுக்கு வழியை விட்டு நீங்கள் உங்கள் பயணத்தை தொடருங்க , யாரும் தடுக்க போவதில்லை , தமிழக கார்பொரேட் குடும்பம் போல ஆகிவிடாதீங்க


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை