உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மியான்மர் எல்லையில் வேலி; பழங்குடியினர் கடும் எதிர்ப்பு

மியான்மர் எல்லையில் வேலி; பழங்குடியினர் கடும் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூரில் இந்திய - மியான்மர் எல்லை பகுதியில் வேலி அமைப்பதற்கு மணிப்பூர் பழங்குடியினர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் மியான்மர் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வருவது தொடர்கதையாக உள்ளது.நம் நாட்டின் அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்கள் மியான்மருடன், 1,643 கி.மீ., எல்லையை பகிர்கின்றன.சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய - - -மியான்மர் எல்லையில், இந்திய- - வங்கதேச எல்லையைப் போன்று முள்கம்பி தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த பணி, எல்லை சாலைகள் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மணிப்பூரின் மோரே பகுதியில், 10 கி.மீ., எல்லையில் முள்வேலி கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் முள்வேலி கம்பிகள் அமைக்க மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அங்குள்ள பூர்விக பழங்குடியினர் தலைவர்கள் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில், இந்திய - மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது இருநாட்டு பழங்குடியினர் இடையிலான சுதந்திரமான நடமாட்டத்தை தடுக்கும் என கூறிய அவர்கள், மியான்மர் அதிகாரிகளுடனும் இதுகுறித்து பேச உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kalyan Singapore
ஜன 29, 2024 15:28

எந்த பழங்குடியினர் எதிர்க்கிறது அவர்கள் பகுதிகளை மியன்மாருடன் சேர்த்து வேலி கட்டிவிட்டால் பிறகு தொல்லையே இல்லையே


rama adhavan
ஜன 29, 2024 11:22

போக வேண்டிய பழங்குடியினர் மயன்மர் போய் நிரந்திரமாக செட்டில் ஆகட்டும்.


VSaminathan
ஜன 29, 2024 08:45

முதலில் பழஙழகுடியினரை அடக்கி ஒடுக்க வேண்டும்-இவர்களே எல்லா சமூக விரோத செயல்களுக்கும் துணை போகின்றனர்.


krishnamurthy
ஜன 29, 2024 08:17

வேலி அமைப்பதே சிறந்தது.


GMM
ஜன 29, 2024 08:15

இந்தியா மியாமர் தனி நாடுகள். சர்வதேச சட்டம் மீறி, ஆவணங்கள் இல்லாமல், இரு நாடுகளுக்கு இடையில் பழங்குடியினர் சுதந்திரமாக எப்படி நடமாட முடியும்.? சுதந்திர நடமாட்டம் என்றால் ஊடுருவல். கடத்தல், சீனர் கூட உள் வருவர். இந்திய பாதுகாப்பு? சுதந்திரமாக நடமாட இந்தியாவுடன் மியாமரை இணைக்க வேண்டும்.


jayvee
ஜன 29, 2024 07:14

பழங்குடியினர் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் இஸ்லாமிய அமைப்புகளின் கதறல் இது.. கடத்தல் தடைபெறும்.. சட்ட விரோத ரோஹியகக்களின் நுழைவு தடுக்கப்படும். அடுத்து இவர்களுக்கு குரல் கொடுக்க காங்கிரஸும், கம்யூனிஸ்டும் மம்தாவும் ஓடி வருவார்கள் ..


J.V. Iyer
ஜன 29, 2024 06:32

மணிப்பூரில் உள்ளவர்களே மியன்மாரில் இருந்து வந்தவர்களாக இருக்கும். ஓரிருவர் எதிர்த்தால், மியன்மாருக்கே விரட்டுங்கள்.


NicoleThomson
ஜன 29, 2024 05:38

அப்போ நீங்களே உள்ளே நுழைவோரை தடுத்துவிடுங்க பழங்குடியினர்


Kasimani Baskaran
ஜன 29, 2024 05:31

சுதந்திரமாக அடுத்த நாட்டுக்குள் எப்படி சென்று வருவது? பாஸ்ப்போர்ட் வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ