மேலும் செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டை: சீன ஆயுதங்கள் பறிமுதல்
2 hour(s) ago
மனித குலத்தை பாதுகாக்கும் இந்தியா: ராஜ்நாத் சிங் பெருமிதம்
3 hour(s) ago | 1
புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்
4 hour(s) ago | 9
துபாய்: தேஜஸ் போர் விமான விபத்தில் பலியான விமானி யார் என்பது அடையாளம் காணப்பட்டு உள்ளது. விமானியின் மறைவுக்கு இமாச்சல பிரதேச முதல்வர் இரங்கல் வெளியிட்டுள்ளார்.துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் பங்கேற்றிருந்தன. இந்தியாவின் தரப்பில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் வானில் பறந்து சாகசம் செய்து கொண்டு இருந்தது.அப்போது எதிர்பாராத தருணத்தில் இந்த விமானம் தரையிறங்க தொடங்கிய போது கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் இருந்த விமானி உயிரிழந்தார். விமான விபத்தை உறுதி செய்த இந்திய விமானப்படை அதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது.ஆனால் உயிரிழந்த விமானியை பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்தது. இந் நிலையில், விமானி யார் என்ற விவரத்தை இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் வெளியிட்டு உள்ளார். அவரது பெயர் விங் கமாண்டர் நமன் சியால். இமாச்சல பிரதேசம் காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.இந்த விபரத்தை குறிப்பிட்டு முதல்வர் சுக்விந்தர் சிங் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; துபாய் விமான கண்காட்சியில் தேஜஸ் விமான விபத்தில் இமாச்சல பிரதேசம், காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்த துணிச்சலான விங் கமாண்டர் நமன் சியால் உயிரிழந்த செய்தி மிகவும் மன வேதனையையும், ஆன்மாவை நொறுக்குவதாகவும் உள்ளது. நம் தேசம் ஒரு துணிச்சலான, கடமை உணர்வு கொண்ட விமானியை இழந்துவிட்டது. இவ்வாறு அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளார். தமது பதிவில் சுக்விந்தர் சிங், விமானியின் புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.
இமாச்சல பிரதேசம், காங்க்ரா மாவட்டத்தில் உள்ள நக்ரோட்டாவைச் சேர்ந்தவர் நமன் சியால்(34). ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் பணியாற்றியவர். இவரது மனைவியும் இந்திய விமானப்படையில் மூத்த அதிகாரியாக உள்ளார். நமன் சியால் தந்தையும், இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
2 hour(s) ago
3 hour(s) ago | 1
4 hour(s) ago | 9