உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமூக வலைதள முகப்பு பக்கத்தில் தேசியக்கொடி: பிரதமர் வேண்டுகோள்

சமூக வலைதள முகப்பு பக்கத்தில் தேசியக்கொடி: பிரதமர் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும், வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ள பிரதமர் மோடி, தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தேசியக்கொடியை முகப்பு படமாக வைத்து உள்ளார். அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் 78 வது சுதந்திர தினம் ஆக., 15 கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அன்றைய தினம் அனைவரும், வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி, ‛ மன் கி பாத் ' நிகழ்ச்சியின் போது வேண்டுகோள் விடுத்து இருந்தார்.இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கங்களில் தனது படத்தை நீக்கிவிட்டு தேசியக் கொடி படத்தை பிரதமர் வைத்துள்ளார். இது குறித்து வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்த ஆண்டு சுதந்திர தினம் நெருங்கி வருகிறது. ஹர் கர் திரங்கா என்பதை மறக்க முடியாத மக்களுக்கான இயக்கமாக மீண்டும் மாற்றுவோம். நான் எனது முகப்பு படத்தை மாற்றுகிறேன். இதன் மூலம் நமது தேசியக்கொடியை கொண்டாடுவதில் என்னுடன் அனைவரும் இணைய வேண்டும். என கேட்டுக்கொள்கிறேன். தேசியக்கொடியுடன் உங்களின் செல்பிக்களை HTTPS:// harghartiranga.comஎன்ற இணையதளத்தில் பகிருங்கள். இவ்வாறு அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Narayanan Muthu
ஆக 09, 2024 21:49

இந்திய மக்களுக்கு தேசபக்தி பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. தன்னிருப்பை காட்டிக்கொள்ள இப்படி எதையாவது கிளப்பி விடவேண்டியது. கொரோனா காலத்தில் தட்டு டம்ளர் எடுத்து தட்டியம் டார்ச் அடித்தும் விளக்கேற்றியும் கொரோனவை விரட்டிய தமாஷ் இன்னும் நீங்கா நினைவாகி போனது.


Narayanan Muthu
ஆக 09, 2024 21:45

மோடியின் பேச்சை RSS செவிமடுக்குமா. அவர்களின் சமூக வலை தல பக்கத்தில் தேசிய கோடியை பதிவேற்றுவார்களா. ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லடி கதையாகிட போகுது.


T.sthivinayagam
ஆக 09, 2024 21:14

வெள்ளையர்களிடம்இருந்து சுதந்திரம் அடைந்தோம் ஆனால் அரசு உயர்பதிஙியில் காலம் காலமாம இருப்பவர்களிடம் இருந்து எப்போது சுதந்திரம் அடைலோம் என்று மக்கள் கேட்கின்றனர்


தஞ்சை மன்னர்
ஆக 09, 2024 21:06

ஹி ஹி ஆமாம் பிரான்ஸ் நாட்டு ரபேல் வாட்ச் கட்டினால் தான் இந்திய தேசிய தேசபக்தி அணை நீர்போல பொங்கி வழியும்


Kumar Kumzi
ஆக 09, 2024 22:55

கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு இந்தியாவில் என்ன வேலை


தஞ்சை மன்னர்
ஆக 09, 2024 21:04

இந்தியாவின் தலைநரகம் எது என்று அமெரிக்காவில் ஒரு சர்வே எடுத்தார்கள் அதில் 99 சதவீத ஆட்கள் i dont know காரணம் இங்கே நம்ம ஆளுதான் அவுன்னா அமெரிக்காவே சொல்லிறிச்சி பி சே பி ஆட்சி சூப்பருன்னு


Kumar Kumzi
ஆக 09, 2024 22:57

உனது நாட்டின் தலைநகரம் டாக்கா தானே


தஞ்சை மன்னர்
ஆக 10, 2024 11:00

நீ சொல்வதுபோல நீயே ஒரு இடத்தை சொல்லிவிட்டாய் ஆனால் நாடா நிலமோ இல்லாத கல்லக்குடி ஏறித்தான் நீ எதுவுமே ல்லாமல் இங்கே என்ன வேலை உனக்கு


hari
ஆக 09, 2024 18:25

திராவிட முட்டுக்கள் மற்றும் பாக்கிஸ்தான் முட்டுக்கள் கதறல் காணவில்லை.... இது ஒவ்வொரு இந்தியனின் கடமை....


Pavanan
ஆக 09, 2024 17:57

We Indians are patriotic than this Stunt master and him team.


Narayanan Muthu
ஆக 09, 2024 21:41

ஹாஹாஹாஹா


sundarsvpr
ஆக 09, 2024 16:57

மக்களில் தினமும் திருக்கோயில்களுக்கு செல்பவர்கள் இருப்பார்கள். ஆனால் தினமும் செல்வதில்லை . காரணம் பல இருக்கும். திருவிழா நாட்களில் மட்டும் குடும்பத்துடன் செல்கிறோம். சுதந்திரம் அடைந்த நாளை விழாவாக கருதி கொடி ஏற்றுகிறோம். தினமும் தேசிய கொடி ஏற்றவேண்டும். அப்படி செய்தால் விடுதலைக்கு போராடிய தியாகிகளைதினமும் நினைப்போம்.


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ