உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அன்னபூரணி திரைப்பட சர்ச்சை: மன்னிப்பு கேட்டார் நயன்தாரா

அன்னபூரணி திரைப்பட சர்ச்சை: மன்னிப்பு கேட்டார் நயன்தாரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றதாக அன்னபூரணி திரைப்படத்திற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த படத்தின் நாயகி நயன்தாரா, மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.நயன்தாரா, ஜெய் நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் கடந்த டிசம்பரில் திரையரங்கில் வெளியானது. பின், ஓ.டி.டி., எனும் இணைய ஒளிபரப்பு தளத்தில் வெளியானது. இந்த படத்தில் பிராமண பெண்ணான நயன்தாரா, புர்கா அணிந்து மாமிசம் சமைப்பது போன்றும், ராமர் வனவாசத்தின் போது அசைவம் சாப்பிட்டதாகவும் காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நயன்தாரா மற்றும் பட தயாரிப்பு குழுவினர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், கவனக்குறைவாக ஏற்பட்ட நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்பதாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.ஜெய் ஸ்ரீராம் என தலைப்பிட்டு நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தடைகளை மன உறுதியுடன் கடந்து முன்னேறும் ஒருவரின் வாழ்க்கை பயணத்தை பிரதிபலிப்பது தான் அன்னபூரணி திரைப்படத்தின் நோக்கம். தணிக்கை செய்யப்பட்டு திரையரங்கில் வெளியான படம், ஓ.டி.டி.,யில் இருந்து நீக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நேர்மறையான செய்தியை பகிரும் முயற்சியில் கவனக்குறைவாக இருந்திருக்கலாம்; அது சிலரை காயப்படுத்தி இருக்கலாம்.இந்த பிரச்னையின் தீவிரத்தன்மையை புரிந்து கொள்கிறோம். யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கோ, என் குழுவினருக்கோ கிடையாது. கடவுள் நம்பிக்கை உள்ள நான் எதையும் உள்நோக்கத்தோடு செய்ய வில்லை. இதனால் யார் மனது புண்பட்டதோ அவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

SENTHIL
ஜன 21, 2024 01:33

இதே மாதிரி வேற மத நம்பிக்கைகளுக்கு உன்னால் நடிக்க முடியுமா ? நடித்துதான் பாரேன்


duruvasar
ஜன 20, 2024 16:13

பாயசம் சாப்பிடு முன் இந்த தெளிந்ருதால் நன்றாக இருந்திருக்கும்.


sahayadhas
ஜன 20, 2024 14:59

எப்படி மன்னிப்பு கேட்டார், வெளியே சொன்னதற்கா


K.Ramesh
ஜன 20, 2024 13:40

Brahmin girl is preparing non veg scenaries came in previous Tamil pictures also. But in this picture they keep the name "Annapurani"that is the god of Kashi Vishwanath temple take care to give food of all devotees. In this picture character "Annapurani" is preparing non veg means what?. The temple Kashi vishwanathar is now under "gyanvapi" issue so they Target lto disrespect hindu god and sanatana dharma. They also told bagawan Ramar also eat non veg. It is very sensitive issues and central government will take severe stringent action and ban such a cinemas which seed negative sentiment in societies. Also ban entire non veg eateries along the girivalam path in annamalayar temple. State government should not bias in this issues and be honest and serious and should not be like blind eyes for degrading not only Brahmin and entire any e and religious and culture and be a government for all people. JAI SRIRAM..VAZHGA BHARATHA MANI THIRUNADU.VAZHGA BHARATA MAKKAL.


KavikumarRam
ஜன 20, 2024 13:12

இனிமேல் போலி சந்தர்ப்பவாத நடிகர்களான சிவகுமார், சூர்யா, கார்த்தி, சின்னது, ஜோதிகா, சத்யராஜ், விஜய், கமல் போன்ற பிரிவினைவாத, ஜாதி மதம் பற்றி மற்றவர்களுக்கு மட்டும் வியாக்கியானம் செய்யும் இவர்களின் படங்களை ஓடிடி ல் கூட பார்க்கக்கூடாதுன்னு குடும்பத்தோடு முடிவெடுத்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. அவர்கள் வரிசையில் இவளும் சேர்த்தாச்சு.


PV
ஜன 20, 2024 17:36

Super, same


kulandai kannan
ஜன 20, 2024 12:17

தமிழக இந்து அமைப்புகள் ஏன் போராடவில்லை?


sridhar
ஜன 20, 2024 16:58

அவ்வளவு தான் ரோஷம். இல்லை என்றால் இங்கே ஹிந்து விரோத திராவிட கட்சிகள் எப்படி ஜெயிக்கும்.


rama adhavan
ஜன 20, 2024 12:00

நீபந்தனை அற்ற மன்னிப்பு கேட்கவில்லை. ஓரு வள வள அறிக்கை தான் விட்டார். அதில் தேவை இல்லாத கருத்துக்களே ஆக்கிரமித்து உள்ளன. இந்த மன்னிப்பு ஓரு கண்துடைப்பு தான்.


Rajah
ஜன 20, 2024 09:55

சேரனின் Journey என்ற தொடரில் தங்கள் பெயர் காரணமாக வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப் படுகின்றார்கள் என்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டை வைத்திருந்தார். தமிழ் சினிமாவில் பல மேதாவிகள் இப்படி சிறுபான்மையினருக்கு எதிராக இந்திய அரசு செயல் படுகின்றது என்ற கருத்தை சினிமாவில் காண்பிக்கின்றார்கள்.


vbs manian
ஜன 20, 2024 09:50

திருவரங்கன் கோவில் வாசலில் சுத்தம் செய்து ஒரு கோலம் போடுங்கள். புண்ணியம் உண்டு.


angbu ganesh
ஜன 20, 2024 09:26

ஓகே இது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை