உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியுடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு

பிரதமர் மோடியுடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு

புதுடில்லி: புதுடில்லியில் பிரதமர் மோடியை ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அவரது மனைவி ஹிமானி மோர் ஆகியோர் சந்தித்தனர்.2020 டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் தங்க பதக்கத்தையும், 2024-பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்று பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. அவர் லெப்டினன்ட் கர்னல்(கவுரவ) ஆகவும் உள்ளார்.இந்நிலையில், இன்று டில்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:இன்று காலை , லோக் கல்யாண் மார்க்கில் நீரஜ் சோப்ராவையும் அவரது மனைவி ஹிமானி மோரையும் சந்தித்தேன். விளையாட்டு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சிறந்த கலந்துரையாடலை மேற்கொண்டோம்.இவ்வாறு மோடி பதிவிட்டுள்ளாா்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை