உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு வினாத்தாள் கசிவா?; தேர்வு முகமை விளக்கம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவா?; தேர்வு முகமை விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.நாடு முழுதும், 557 நகரங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில், நேற்று (மே 06) 24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் என்ற இடத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் நடந்த நீட் தேர்வில் மாணவர்கள் தேர்வு முடியும் முன்னரே வினாத்தாளுடன் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து சுமார் 4 மணி அளவில் கேள்வித்தாள்கள் சமூக ஊடகங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில்,‛‛ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை. தேர்வு முடிவதற்கு முன்பே வலுக்கட்டாயமாக வெளியேறிய மாணவர்கள் வினாத்தாளை இணையத்தில் பரப்பினர். மாலை 4 மணியளவில் தான் வினாத்தாள் பரப்பப்பட்டது. அதற்கு முன்பே தேர்வுகள் துவங்கிவிட்டன'' என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

ஆள் மாறாட்டம் அம்பலம்!

ராஜஸ்தான் மாணவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு விவகாரங்களில் நாடு முழுவதும் இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கல்யாணராமன்
மே 06, 2024 16:28

கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து தேர்வு நடத்தப்படுகிறது தேர்வு மையத்தில் நுழைந்த பின் தேர்வு முடியும் வரை வெளியேற அனுமதி இல்லை, கேள்வி தாளை எடுத்து செல்ல அனுமதி இல்லை, அவருடைய செல்போனை திரும்ப பெற அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் போட்டிருக்கலாம் முன்னதாக வெளியேற விரும்பும் நபரின் கேள்வி தாளை திரும்ப பெற்றுக்கொண்டு தேர்வு மையத்தில் உள்ள வேறொரு தனி அறையில் சி ஐ எஸ் எப் அதிகாரிகள் மூலம் தடுப்பு காவலில் வைத்து தேர்வு முடிந்த பின் வெளியேற அனுமதிக்க வேண்டும்


Velan Iyengaar
மே 06, 2024 15:33

நீட் தேர்வில் என்ன என்ன குளறுபடிகளை அரங்கேற்றபோகுதோ ??


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ