உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு குளறுபடி: சிபிஐ விசாரணை கோரி வழக்கு

நீட் தேர்வு குளறுபடி: சிபிஐ விசாரணை கோரி வழக்கு

புதுடில்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நடந்தது. இந்த தேர்வின் போது வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. ஆனால், தேர்வை நடத்தும் என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை மறுத்தது. கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டதிலும் குளறுபடி நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக நடந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. நேற்று விசாரணையின் போது, 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுகிறது. மறு தேர்வு எழுதும் வாய்ப்பு தரப்படும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசு மற்றும் என்டிஏ.,வுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
ஜூன் 14, 2024 20:46

எங்க மந்திரி ஊழல், முறைகேடு பண்ணினா அதை விசாரிக்க சி பி ஐ வரக்கூடாது ........ எங்க அயலக அணிக்காரன் போதை பிஸினஸ்ல இருந்தா அவனை மத்திய புலனாய்வு பிடிக்கக் கூடாது ...... விசாரிக்கவும் கூடாது ....... ஆனா நீட் விஷயமா மத்திய அரசை உச்ச கோர்ட் விசாரிக்கணும் ...... உச்ச கோர்ட் முழுவதும் நிரம்பி இருப்பது இடதுசாரி நீதி பாதிகள் ன்னு எங்களுக்கு தெரியாதா ????


Barakat Ali
ஜூன் 14, 2024 20:27

முறைகேடு நடந்திருந்தால் அதைச் செய்த பலர் டாக்டர் படிப்பையும் முடித்துவிட்டு ப்ராக்டிஸ் செய்யப்போயிருக்கலாம் ..... நீட் ஐ கவனித்த காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து விசாரிக்க வேண்டும் .......


தாமரை மலர்கிறது
ஜூன் 14, 2024 18:45

வினாத்தாள் கசிவு ஏற்பட்டது என்று சொல்லுவது கஷ்டப்பட்டு படித்து நூற்றுக்கு நூறு மார்க் எடுத்த அறுபத்தியேழு மாணவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிப்பது. மிகவும் கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வில் எந்த வித குளறுபடியும் இல்லை. உலகத்திற்கு எடுத்துக்காட்டாக மிகச்சிறப்பாக நீட் செயல்படுகிறது. எதிர்க்கட்சிகள் வெறுமனே அரசியல் செய்கின்றன. மக்கள் இதையெல்லாம் நம்பமாட்டார்கள் என்பது மீண்டும் மோடியை தேர்வு செய்ததில் இருந்தே தெரிகிறது. அதனால் தான் சுப்ரிம் கோர்ட் இந்த கேசில் எந்த வித உண்மையும் இல்லை என்பதால் கொன்சிலிங்கை நடத்தி சீட் அலாட் பண்ணச்சொல்லிவிட்டது. அதற்குப்பின் தீர்ப்பு வந்தால் என்ன? வராட்டி என்ன? வளர்மதி வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன?


GMM
ஜூன் 14, 2024 14:44

வினாத்தாள் கசிவு, குளறுபடி எந்த இடத்தில் நடந்ததோ அந்த தேர்வு பொறுப்பு அதிகாரியை விசாரிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் எதற்கு எடுத்தாலும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை ஏற்று விசாரிப்பது சரியல்ல. எடுத்த எடுப்பில் உச்ச நீதிமன்றம் விசாரிப்பது சரியா? மாநில நீதிமன்றத்தில் அதிகாரம் இல்லையா? விசாரணை வழிமுறையும் பின்பற்றாமல் உச்ச நீதிமன்றத்தை சர்வாதிகார மன்றமாக அதிக பணம் பெற்று வழக்கறிஞர்கள் சிலர் மாற்றி வருகின்றனர். கோலிஜிய முறை நீக்கி, உடன் அனைத்து நீதிபதிகள் தேர்வு, வழக்கறிஞர்கள் மனு தணிக்கை, விசாரணை ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு வகுக்க வேண்டும்.


Vathsan
ஜூன் 14, 2024 18:04

சும்மா மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்தவும். நீட் தேர்வு வந்து விட்டது, இன்னும் செஷன்ஸ் கோர்ட், டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட், உச்ச கோர்ட் என்று வரிசையாக போக நேரம் இல்லை. அவசரம் மற்றும் விசாரணையின் வீரியம் குறித்து உச்ச நீதிமன்றம் சரியான முடிவெடுக்கும் என்று நம்புகிறேன். வினாத்தாள் லீக் நடந்து கைது நடவடிக்கை நடந்த பிறகும், பலவகையான ஸ்கோரிங் குளறுபடி. ஒழுங்காய் படித்த மாணவர்களுக்கு நாமம்தான். மத்திய அரசு சரியாக தூங்கி விட்டது.


Palanisamy Sekar
ஜூன் 14, 2024 14:02

நீட் தேர்வு மிக நல்ல அருமையான தேர்வுதான். தனியார் கல்லூரிகளுக்கு சிலரின் வக்காலத்து அரசியலில் ஓங்கி ஒலிக்கின்றது. காரணம் பல கோடிகளை குவிக்க இந்த நீட் தடையாக உள்ளதே என்கிற எரிச்சல் கோபம்தான் காரணம். காங்கிரஸ் காலத்தில் அறிமுகம் செய்த திட்டமே என்றாலும் அதனை செம்மைப்படுத்தி சிறப்பாக செய்துவருகின்றது மத்திய அரசு. சில தவறுகள் சிலரால் திட்டமிட்டு நடத்தப்பட்டாலும் கூட சாதாரண ஏழை மாணவனின் மருத்துவர் கனவை இந்த நீட் தேர்வுதான் நிறைவேற்றுகின்றது. சந்தடி சாக்குக்கெல்லாம் சி பி ஐ விசாரணை என்கிறவர்கள், ஒரு மாநிலத்தின் மகன் மீதும் மருமகன் மீதும் முப்பதாயிரம் கோடி அளவுக்கு சொந்தக்காட்சி அமைச்சராலேயே புகார் வாசிக்கப்பட்டபோது ஏன் இதுபோல சி பி ஐ விசாரணையை கேட்க மறந்தார்கள்? இதன் பின்னணியில் தனியார் மருத்துவக்கல்லூரிகளின் பெரும்புள்ளிகள் இருக்கின்றார்கள்.


Vathsan
ஜூன் 14, 2024 14:02

வியாபம், நீட் இது மாதிரி விஷயங்களில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. திருடனிடம் போய் திருட்டை ஒழிக்க சொன்னால் எப்படி செய்வான். சிபிஐ ஒன்றும் முறைகேடு இல்லை என்று முடித்து வைக்கும். உயிரைக்கொடுத்து படித்த மாணவர்களுக்கு சோகமே மிஞ்சும். வியாபம் ஊழல் தலைவர் இப்போ பிஜேபிக்கு தலைவர்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை