உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு முறைகேட்டை மோடியால் தடுக்க முடியாதா: ராகுல் கேள்வி

நீட் தேர்வு முறைகேட்டை மோடியால் தடுக்க முடியாதா: ராகுல் கேள்வி

புதுடில்லி: வியாபம் ஊழலை விட நீட் தேர்வு முறைகேடு பெரியது என்றும், ரஷ்யா - உக்ரைன் போரை தடுத்து நிறுத்தியதாக கூறிக்கொள்ளும் பிரதமர் மோடியால், இந்தியாவில் வினாத்தாள் கசிவதை தடுக்க முடியவில்லை எனவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, பணத்தை பெற்றுக்கொண்டு வினாத்தாளை முன்கூட்டியே விற்றது உள்ளிட்ட பல முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வியாபம் ஊழலை விட நீட் தேர்வு முறைகேடு பெரியது. ரஷ்யா - உக்ரைன் போரை மோடி தடுத்து நிறுத்தியதாக கூறுகிறார்கள். ஆனால் நரேந்திர மோடியால் இந்தியாவில் வினாத்தாள் கசிவதை தடுக்க முடியவில்லை. பா.ஜ.,வின் தாய் அமைப்பால் கல்வி முறை கைப்பற்றப்பட்டதே வினாத்தாள் கசிவுக்குக் காரணம். இது மாறாத வரை, வினாத்தாள் கசிவுகள் தொடரும். இது தேச விரோத செயல். அனைத்து நிறுவனங்களும் அந்த அமைப்பால் கைப்பற்றப்பட்டதால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது.

கல்வி முறையில் ஊடுருவல்

துணைவேந்தர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை; அவர்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த அமைப்பும் பா.ஜ.,வும் நமது கல்வி முறையை ஊடுருவி அழித்து விட்டன. பணமதிப்பிழப்பு மூலம் பொருளாதாரத்திற்கு நரேந்திர மோடி செய்ததை, தற்போது கல்வி முறையிலும் செய்துள்ளார். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படுவது மிகவும் முக்கியம்.

மோடியின் கவனம்

நீட் தேர்வு முறைகேடு மற்றும் யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து பார்லிமென்டில் நிச்சயம் கேள்வி எழுப்புவோம். நீட் தேர்வு மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. மாணவர்கள் மீது கவனம் செலுத்தாமல், பார்லிமென்டில் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் மட்டுமே மோடி கவனம் செலுத்திவருகிறார். பா.ஜ., ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் தான் மோசடி மையங்களாக உள்ளன. இப்போது, ​​நாம் ஒரு பேரழிவில் இருக்கிறோம் என்பதையும், எதுவும் செய்யாத ஒரு அரசு இங்கு உள்ளது என்பதையும் மக்கள் அறிந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

தாமரை மலர்கிறது
ஜூன் 20, 2024 22:51

நீட் மிகவும் சிறப்பாக செயல்படுவதால், தனியார் மருத்துவக்கல்லூரிகள் கொள்ளையடிக்க முடியவில்லையே என்ற வைத்தெரிச்சலில் ராகுல் புலம்புகிறார். I


Mohanakrishnan
ஜூன் 20, 2024 21:11

This superman must first be told where is கள்ளக்குறிச்சி and as the CM was it not avoidable Stupidity by pappu


Jayaraman Sekar
ஜூன் 20, 2024 21:05

ஆம்ம்ம்ம்ம்ம்மாம் ராவுள் நாயனா.. இந்த மோடி ஒண்ணியுமே பண்ணமாட்டேங்கறார்... எங்க தெருவுலே கூட 4 நாளா குப்பே எடுக்கலை.. மோடி இன்னா பண்ணிக்கிணு கீறார் தெரியலை.. வளக்கமா வர்ர கூர்க்கா வரலை.. இதெல்லாம் மோடி கவுனிக்க மாணாமா???


Rajkumar
ஜூன் 20, 2024 19:54

தமிழ் நாட்டில் 42 பேர் கள்ள சாராயம் குடித்து இறந்து விட்டனர். அங்கு உங்கள் கூட்டணி அரசு நடக்கிறது அதற்கு ஒன்றும் சொல்லாமல் மோடி புராணம் பாடிக்கொண்டு உள்ளிர். மக்கள் சாவுக்கு ஒன்றும் கேட்க தோன்றவில்லையா. நாட்டிற்கு வாய்த சாபக்கேடு.


subramanian
ஜூன் 20, 2024 19:42

ராகுலுக்கு ஓட்டு போடும் மக்கள் தேச துரோகிகள்.


rsudarsan lic
ஜூன் 20, 2024 19:26

Mr. Rahul, your alliance and your party is conspiribg to make you the leader of the opposition, which is,a responsible post. You may have to attend sessions and speak in a responsible way. Please understand tge difference between a criminal a gang a conspiracy etc. If you have a genuine opinion about how to set right a mistake, and it works, you have a chance to shine in politics, instead of being a loudspeaker


பேசும் தமிழன்
ஜூன் 20, 2024 18:42

பப்பு.... நீங்க என்ன பேசுகிறோம் என்று தெரிந்து தான் பேசுகிறீர்களா ??? எப்போதும் வாய்க்கு வந்தபடி பேசி கொண்டு திரியுற வேலை செய்ய கூடாது.


Palanisamy Sekar
ஜூன் 20, 2024 18:19

காங்கிரசுக்கு இப்போது அரசாங்கத்தில் இல்லாத காரணத்தால் பெரிய அளவில் ஊழல் செய்திட முடியவில்லை. ஏனெனில் மோடிஜி அவர்கள் அந்த ஊழல் பெருச்சாளிகளை விரட்டியடித்துவிட்டார். இப்போது புதிதாக ஊழல் எலிகள் தலைதூக்கி வருகின்றன நீட் தேர்வு வினாத்தாள் வெளியிட்ட வகையில் ராகுலுக்கு போகப்போக புரியும் இந்த ஊழலில் ஈடுபட்ட காங்கிரஸ் கூட்டம் யார் என்று. யோக்கிய வேஷம் போட்டுகொண்டு பேட்டி கொடுக்கின்றார். மாபெரும் காங்கிரஸ் என்கிற ஊழல் சாம்ராஜ்யத்தையே சிதைத்த அவருக்கு இதெல்லாம் ஜுஜ்ஜுப்பி மேட்டர். நீட் தேர்வு ரத்து செய்ய திட்டம்போட்டது இவற்றையெல்லாம் செய்கின்ற மருத்துவக்கல்லூரி பெரும்முதலாளிகளின் சாதித்திட்டம்தான் இது என்று நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிகின்றது. ஆனால் ராகுலுக்குத்தான் இதெல்லாம் தெரியவே இல்லை. முதிர்ச்சியில்லா பப்பு போல ராகுல்


Balasubramanian
ஜூன் 20, 2024 18:14

எல்லோரும் எல்லவற்றையும் உம்மைப் போல டகா டக் என்று செய்து விட முடியுமா?


RajK
ஜூன் 20, 2024 18:09

கள்ளச்சாராய விஷயத்தில் தோழமைக் கட்சி மாட்டிக்கொண்டதால் அதை திசை திருப்பும் விதமாக ராகுல் அவர்கள் இந்த அறிக்கை விடுகிறார்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை