உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛நீட் வினாத்தாள் வெளியான விவகாரம்: முக்கிய நபரை கைது செய்தது சி.பி.ஐ.,

‛நீட் வினாத்தாள் வெளியான விவகாரம்: முக்கிய நபரை கைது செய்தது சி.பி.ஐ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக முக்கிய குற்றவாளியை சி.பி.ஐ., கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மருத்துவ படிப்புகளுக்கான ‛‛நீட் '' தேர்வு கடந்த மே.05-ம் தேதி நடந்தது. இதில் பீஹார், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுதும் பேசப்பட்ட நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை ஏற்று சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீஹார் தலைநகர் பாட்னாவில் மணீஷ் பிரகாஷ் மற்றும் அசுதோஷ் என இரண்டு பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில் முக்கிய குற்றவாளியான ஜார்க்கண்ட் மாநிலம் தான்பாத்தில் அமான் சிங் என்பவரை சி.பி.ஐ., கைது செய்தது. இவர்தான் வினாத்தாள் கசிவு முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஜூலை 04, 2024 10:41

பிடிபட்டவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லி இருந்தால் ஊரில் உள்ள எல்லா சங்கிகளும் இங்கு வந்து வீராவேசமாக கம்பு சுற்றி இருப்பார்களே!


NAGARAJAN
ஜூலை 04, 2024 08:34

இதுதான் இவர்களின் நீட் லட்சனம். . எவ்வளவு அயோக்கிய தனங்கள். .


Guna Gkrv
ஜூலை 04, 2024 06:06

அதனால் தப்பு இல்லை அப்படித்தானே? மேய்ப்பது எருமை இதில் பெருமை .


தாமரை மலர்கிறது
ஜூலை 04, 2024 01:13

வினாத்தாள் ஒருசில மணித்துளிகளுக்கு முன்னரே கசிந்திருப்பதால், இதனால் பெரிய அளவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. இதை வைத்து வெற்று அரசியல் செய்கிறார்கள். படித்தால் நீட் பாஸ் பண்ணலாம். படிக்காவிடில் நர்ஸ் ஆகலாம். டாக்டர் மட்டுமே வேலை இல்லை.


Training Coordinator
ஜூலை 04, 2024 17:49

கசியாமல் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை