உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய கிரிமினல் சட்டம் அமலுக்கு வந்தது: மின்னணு மூலம் மின்னல் வேகத்தில் தீர்வு

புதிய கிரிமினல் சட்டம் அமலுக்கு வந்தது: மின்னணு மூலம் மின்னல் வேகத்தில் தீர்வு

புதுடில்லி: பழங்கால ஆங்கில ஆட்சியில் உருவாக்கப்பட்ட பழம் பெரும் கிரிமினில் சட்டங்கள் நீக்கப்பட்டு புதிய 3 கிரிமினல் சட்டங்கள் இன்று (ஜூலை-1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் உரிய நீதி கிடைக்க வழிவகை செய்யும் இந்த புதிய சட்டங்கள்.கடந்த டிச-21 ல் பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் (பி.எஸ்.ஏ.,) ஆகியன உருவாக்கப்பட்டன. பெண்கள் மீதான தாக்குதல், குழந்தைகள் தொடர்பான குற்றப்புகார்கள், வயது மூத்தவர்கள் பாதிப்புக்கு உரிய நீதி கிடைக்க வழி செய்யும் .

தேச துரோகம் பல பிரிவாக மாற்றம்

தேச துரோகம் என்ற பிரிவு நீக்கப்பட்டு, பிரிவினைவாதம், கிளர்ச்சி, இறையாண்மைக்கு ஊறுவிளைவித்தல், ஒற்றுமைக்கு எதிரான செயல் என சேர்க்கபட்டு தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விரைவான தீர்வு

இந்த சட்டத்தின் மூலம் மின்னஞ்சல் மூலம் புகார் பதிய முடியும். மேலும் இதற்கான எப்ஐஆர் நகல் பாதிக்கப்பட்டோர் டிஜிட்டல் மூலம் பெற்று கொள்ள வழி செய்யும். பாதிப்புக்குள்ளானவர்கள் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியது இருக்காது. தேவைப்படும் போது சென்றால் போதுமானது. பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை அதிகாரி விரைந்து நேரில் சென்று உரிய காலத்திற்குள் அறிக்கை மற்றும் குற்றச்சாட்டுக்களை பதிய வேண்டும். மின்அஞ்சல் மூலம் சம்மன் அனுப்ப முடியும். கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம் உடனுக்குடன் நெருங்கி உறவினர்களுக்கு தெரிவிக்கப்படும். பாதிக்கபட்டோருக்கு உரிய விரைவான சிகிச்சை அளிக்கப்படும்.

வீண் வாய்தாக்கள் இல்லை

வீண் வாய்தாக்கள் இருக்காது, 14 நாட்களுக்குள் எப்ஐஆர், 2 மாதங்களில் விசாரணை முடிப்பு, 90 நாட்களில் பாதிக்கப்பட்டோருக்கு முழு விவரம் தெரிவிக்கப்பட வேண்டும். வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் பெற முடியும். 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுக்கள் வரையப்பட வேண்டும், விசாரணை முடிந்து 45 நாட்களுக்கு மிகாமல் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.பாதிக்கப்படுவோர் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் மின்னணு அளிக்கலாம் . போலீஸ் எல்லை பிரச்சனை குறையும். காகித ஆவணங்கள் குறையும். வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்படலாம். இது போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்ட இந்த சட்டங்கள் இன்று (ஜூலை1 ) முதல் அமலுக்கு வந்தது. நீதி துறை , போலீஸ், பிரிவினருக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 17,500 போலீஸ் ஸ்டேஷன்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் முதல் வழக்காக, டில்லி மற்றும் மத்தியபிரசேத்தின் போபாலில் பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

J.Isaac
ஜூலை 01, 2024 17:54

இந்த சட்டங்களின் தமிழாக்கம் தரவும்.


சாமா
ஜூலை 01, 2024 16:56

இன்னிக்கும் நியாயம் தான் சட்டம். நியாய தர்சனத்தை அமுக்கி வேதம், வேதாந்தம், தர்மம்னு மக்களை மழுங்கடிச்சு வெச்சுட்டாங்க.


Srinivasan Krishnamoorthi
ஜூலை 01, 2024 16:40

நன்மை 9 தீமை 1 என்ற விகிதம் இருக்கும்


GMM
ஜூலை 01, 2024 13:56

காகித மனு அல்லது டிஜிட்டல் மனு, மாநில அளவில் ஒரு ஒப்புகை எண், இரு மாநிலங்களுக்கு இடையில் ஒரு ஒப்புகை எண் மற்றும் தேசிய அளவில் ஒரு ஒப்புகை எண் வரிசையாக வழங்க வேண்டும். மாநில போலீசார் மற்றும் நீதிமன்ற விசாரணை ஒவ்வொரு நடவடிக்கையிலும் current number இணைக்க வேண்டும். கால கெடுவிற்குள் முடிக்கவில்லை என்றால், எடுக்கப்படும் நடவடிக்கை என்ன என்று தெளிவு படுத்த வேண்டும். பயன் தரும் விவரம் பெற்றுள்ளது.


Anand
ஜூலை 01, 2024 12:47

நீதியரசர்கள் தீயா வேலை செய்யணும்.


R.Balasubramanian
ஜூலை 01, 2024 12:40

அதனால் தான் சுடாலின் எதிர்க்கிறார்


ديفيد رافائيل
ஜூலை 01, 2024 22:04

பணம் இருப்பவர்கள் case போட விட மாட்டாங்க


rasaa
ஜூலை 01, 2024 11:56

நீதியரசர்கள் தீர்ப்புக்கு பதில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை பெற்றுத்தரவேண்டும்.


Kanns
ஜூலை 01, 2024 10:47

Sack & Punish Power-Misusing Rulers, Officials esp Police, Judges& Vested False Complainat Gangsters women, Unions, SCs, advocates etc. However, Real & Grave Accused Must be Punished, Not ScapeGoats.


Duruvesan
ஜூலை 01, 2024 10:43

மோடி சார் உங்க சட்டம் தூக்கி குப்பைல போடுங்க .போன வருஷம் மரக்காணம் இப்போ கள்ள குறிச்சி திருப்பூர் இப்படி கள்ள சாராய மரணம் தொடர்கிறது ,டாஸ்மாக் மரணமும் தொடர்கிறது ,தூங்கியது போதும் ,சிபிஐ விசாரணை என்னன்னு தீயமுக அல்லக்கை சொன்னா, அதோட அர்த்தம் இது தொடரும், எப்போ தூங்கி முழிச்சி சாவுகளுக்கு முற்று புள்ளி வைப்பீங்க ,தமிழன் உங்களுக்கு எந்த காலத்திலும் வோட்டு போட மாட்டான் ,அதுக்காக பாராமுகமாக இருப்பது ஒரு பிரதமருக்கு அழகு அல்ல


Kumar Kumzi
ஜூலை 01, 2024 12:12

ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஓட்டு போடுற கூமுட்ஸ் மோடியை பற்றி பேச அறுகதையற்றவர்கள்


K.Muthuraj
ஜூலை 01, 2024 12:15

இதுக்கும் மோடி தானய்யா? முதல்ல நல்ல மாநில அரசு செலக்ட் செய்யுங்க. திமுக அதிமுக இதை விட்டால் நம்ம மண்டையில் தான் ஒன்றும் ஏறாதுள்ள.


S Ramkumar
ஜூலை 01, 2024 12:35

கள்ளச்சாராய மரணங்களுக்கு திமுக தான் நீதி விசாரணை செய்யவேண்டும். சி பி ஐ வந்தாலும் இங்குள்ள லோக்கல் போலீஸ் சப்போர்ட் இல்லாமல் அவர்கள் விசாரணை நடத்த முடியாது. சி பி ஐ, அமலாக்க பிரிவு எல்லாம் தி மு காவிற்கு பிடிக்காது.


Duruvesan
ஜூலை 01, 2024 10:34

இந்த சட்டம் சரியாக எடியூரப்பா ப்ரஜிவால்க்கு பொருந்தும் , மோடி மிட்ஷா இந்த சட்டம் அவர்கள் மீது பாயுமா


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை