உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛நியூஸ்கிளிக் வழக்கு : 8 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

‛‛நியூஸ்கிளிக் வழக்கு : 8 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடில்லி: நியூஸ்கிளிக் இணையதள செய்தி நிறுவனர் மீதான வழக்கில் 8 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், நியூஸ் கிளிக் என்ற இணைய செய்தி நிறுவனம், சீனாவுக்கு ஆதரவாக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது தெரியவந்தது. இதற்காக பெருந்தொகை பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுடில்லி போலீசின் சிறப்புப் பிரிவு விசாரித்தது. கடந்தாண்டு அக்., 3ல் இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் உட்பட, 88 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.இந்நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை ஆசிரியருமான பிரபிர் புர்கயஸ்தா, எச்.ஆர்., அமித் சக்கரவர்த்தி ஆகியோர் ஜனவரியில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டக்கார்களுக்கு பணம் கொடுத்தது, உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.புதுடில்லி சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நேற்று நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா உள்ளிட்டோர் மீது 8 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கையை டில்லி போலீசார் தாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 02, 2024 12:35

இந்த பக்கம் குற்றப்பத்திரிகை படித்து முடிக்கவே நமது நீதிபதிகளுக்கு அல்லது வருடங்கள் ஆகிவிடும் அதற்கு பின் வழக்கு விசாரனை சாட்சிகள் விசாரணை போலீஸ் தரப்பு விசாரனை என ஒரு அல்லது வருடங்கள் விடும் பின்னர் தீர்ப்பு இதெல்லாம் நடந்து முடிக்க எப்படியும் வருடங்கள் ஆகி விடும் அதற்குள் சம்பந்தப்பட்ட நபர் வேறு பெயரில் நிறுவனம் ஆரம்பித்து தன் நம்பிக்கையுடன் புதிய நிறுவனம் ஆரம்பித்து விடுவார்


jayvee
மே 02, 2024 12:18

திமுக அவரை வைத்து செய்ய ஆரம்பித்துவிட்டது


Sampath Kumar
மே 02, 2024 11:24

சீனா விற்கு மட்டும் தான? உலகத்தில் உள்ள அணைத்து நாட்டுக்கும் இங்கே உளவு வேலை பார்க்கின்றார்கள் ஏன்?


N.Purushothaman
மே 02, 2024 06:37

புர்யகஸ்தா போன்ற புல்லுருவிகள் பலர் இந்நாட்டில் உள்ளனர் சொந்த நாட்டிற்கு துரோகம் எய்யும் இவர்களை போன்றோர்களை களையெடுப்பது எதிர்கால பாரதத்திற்கு நல்லது


Kasimani Baskaran
மே 02, 2024 05:10

இந்திய இராக்கெட்டிலேயே கூட சீனக்கொடியை போட்டு சீன விசுவாசத்தைக்காட்டும் தீம்காவை தடை செய்தால்க்கூட தப்பில்லை அதே போல சீனாவுடன் தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் போட்ட காங்கிரசும் கூட தடை செய்யப்பட வேண்டிய அமைப்பே


J.V. Iyer
மே 02, 2024 04:04

தேசபக்தி, நன்னெறி, அடக்கம், நல்லொழுக்கம், நன்னடத்தை, நல்லகுணம், போன்றவைகளை ஆரம்ப பள்ளியில் கற்றுக்கொடுக்கவேண்டும் அப்போதுதான் இந்தியா உருப்படும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ