உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 100 சதவீதம் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்தது என்.ஐ.ஏ.,

100 சதவீதம் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்தது என்.ஐ.ஏ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கடந்த 2024ம் ஆண்டில் என்.ஐ.ஏ., விசாரித்த குற்ற வழக்குகளில் 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் 100% பேரும் தண்டிக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம்' என தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) தெரிவித்துள்ளது.இது குறித்து, தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2024ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரித்த 80 வழக்குகளில், 210 பேர் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாக இடதுசாரி பயங்கரவாதம் தடுப்பு நடவடிக்கையாக 28 வழக்குகள் பதியப்பட்டு 69 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2024ம் ஆண்டில் ரூ.19.57 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.வட கிழக்கு பிராந்திய கிளர்ச்சி சார்ந்த 18 வழக்குகள் பதியப்பட்டன. இதில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். 408 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்புடைய வழக்குகளில் 101 இடங்களில் சோதனையும், 14 பேர் கைதும் செய்யப்பட்டு உள்ளனர். நாட்டுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் நோக்கில் ஜம்மு, ஜெய்பூர், ராஞ்சி, பாட்னா, சண்டீகர் ஆகிய பகுதிகளில் தேச விரோத சக்திகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 11 பேர், ஜம்மு காஷ்மீர் ஜிகாதிகள் 5 பேர் மற்றும் பிற ஜிகாதிகள் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு வெடிகுண்டு வழக்கில் தொடர்புடையவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு, தலைமறைவாக இருந்த 27 பேர் கைது செய்யப்பட்டனர். என்.ஐ.ஏ., விசாரித்த 25 வழக்குகளில் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 68 பேர் தண்டிக்கப்பட்டனர். வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 100% பேரும் தண்டிக்கப்படுவதை என்.ஐ.ஏ., உறுதி செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Tetra
ஜன 02, 2025 11:30

உச்ச நீதி மன்றம் பற்றி தெரிந்தும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆச்சரியம்தான். பொன்முடி பொன்முடி , எங்க போச்சு உங்க கேசுனு பாட வேண்டியதுதான்


என்றும் இந்தியன்
ஜன 01, 2025 17:02

இவங்க உறுதி செய்தால் தண்டனை கிடைத்து விடுமா என்ன???சசிகலா ஜெயிலில் ஆனால் அவர் மாலுக்கு சென்று வருகின்றார் புத்தம் புதிய உடையோடு என்று தான் விடியோ வந்து விட்டதே. பிறகு அவன் ஜெயிலில் ஆனால் 5 நட்சத்திர பார்த்துக்கொள்ளுதல் என்றும் கூட வந்து விட்டது.


sankar
ஜன 02, 2025 05:45

அது இந்த வகையில் வராது மிஸ்டர் இருநூறு


N.Purushothaman
ஜன 01, 2025 16:38

சபாஷ் ..வாழ்த்துக்கள் ஏன் ஐ ஏ ...வரும் காலங்களிலும் சவால் காத்து கொண்டு இருக்கிறது ....விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது மிக அவசியம் ..


தமிழ்வேள்
ஜன 01, 2025 16:10

தண்டனையை உறுதிசெய்வதை விட , உடனடியாக நிறைவேற்ற வழி செய்யவேண்டும் ..அப்பீல் தண்டனை குறைப்பு மன்னிப்பு என்பதே இந்த தேசத்துரோகிகளுக்கு கூடாது ..


sundar
ஜன 01, 2025 15:22

என் ஐ ஏ கண்டுபிடித்த நிறைய குற்றங்களில் வெடி குண்டு விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது .இந்த முகமையை நன்கு விரிவாக்கம் செய்து உள்ளூர் காவல் துறை கண்டு கொள்ளாமல் விடும் குற்றங்களையும் தடுக்க வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 01, 2025 11:47

ஆக துக்கடா துக்கடா ஹோ ஜாய் ன்னு சொல்றவனுக்கெல்லாம் சுளுக்கெடுக்குறது ன்னு முடிவு பண்ணிட்டீங்க ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை