மேலும் செய்திகள்
டில்லி தற்கொலைப்படை தாக்குதல்; உரக்கடைகளில் விசாரணை தீவிரம்
2 hour(s) ago | 2
பாண்லே நெய், பனீர் விலை உயர்வு
5 hour(s) ago
ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி: நேஷனல் பள்ளி முதலிடம்
5 hour(s) ago
குட்கா விற்ற 6 பேர் கைது
5 hour(s) ago
பாட்னா: ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பீஹார் முதல்வராக 10வது முறையாக இன்று (நவ.,20) பதவி ஏற்றார். விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, 202 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது.கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., 89; ஐக்கிய ஜனதா தளம் 85; லோக் ஜனசக்தி ராம் விலாஸ் பஸ்வான் கட்சி 19; ஹிந்துஸ் தானி அவாம் மோர்ச்சா 5, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களை பிடித்தன.என்.டி.ஏ., எனப்படும், தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற கூட்டம் பாட்னாவில் நடந்தது. இதில் தற்போதைய முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் தே.ஜ.., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பீஹார் முதல்வராக, 10வது முறையாக இன்று (நவ.,20) நிதிஷ் குமார் பதவி ஏற்றார். காந்தி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2 hour(s) ago | 2
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago