உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பதவியேற்பு உறுதி மொழியில் இனி கோஷங்கள் கூடாது: ஓம்பிர்லா அதிரடி

பதவியேற்பு உறுதி மொழியில் இனி கோஷங்கள் கூடாது: ஓம்பிர்லா அதிரடி

புதுடில்லி: பார்லிமென்டில் எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதி மொழியில் இனி யாரும் கோஷங்கள் எழுப்ப கூடாது என லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்/https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1ehws69h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த ஜூன் 25-ம் தேதி நடைபெற்ற புதிய லோக்சபா எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதி மொழியின் போது தமிழக எம்.பி.க்கள் தாய், தந்தையில் துவங்கி, ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, என எவரையும் விட்டு வைக்காமல் விதவிதமான வாழ்க கோஷங்களை எழுப்பி உறுதி மொழி எடுத்தனர்.தெலுங்கானாவின் ஹைதராபாத் தொகுதி ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி எம்.பி. அசாதுதீன் ஓவைசி, உருது மொழியில் பதவியேற்று கடைசியில் 'ஜெய் பாலஸ்தீனம்' என கோஷமிட்டார். மேலும் எம்.பி.க்கள் ‛‛பாரத் மதா கி. ஜே'' எனவும், கோஷமிட்டபடி உறுதி மொழி ஏற்றனர்.இந்நிலையில் சபாநாயகர் ஓம்பிர்லா இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். உறுதி மொழி ஏற்பு விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் இனி எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதி மொழியின் போது எந்த கோஷங்களையும் எழுப்பக்கூடாது. நடைமுறையில் இல்லாத ஒன்றை பின்பற்றக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mahendran Puru
ஜூலை 05, 2024 06:19

சபா துணை ஜனா ஆவதற்கு கூவத் தொடங்கியுள்ளார். அங்கே துணை ஜனா, ஜனா ஆவதற்கு.


S srinivasan
ஜூலை 04, 2024 11:37

VERY GOOD DECISION HERE AFTER NO STALIN, NO UDAINIDHI, NO ANBU NIDHI, MO KANI MOZHI, NO KARUNANIDHI, NO JAYALALITH OR AMMA


venugopal s
ஜூலை 04, 2024 10:38

எல்லா விதமான கோஷங்களுக்கும், ஜெய் ஸ்ரீ ராம் உள்பட தடை விதிக்க வேண்டும்!


Sekar KR
ஜூலை 04, 2024 10:33

அண்ணாதுரை அறிவாற்றல் மிக்கவர், ஆட்சியை பிடிக்க மாணவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி வெற்றிகண்டார். ஓர் அறிவாளி தவறு செய்தால் அதை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகும். அதன் விளைவுதான் இன்றும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.


SP
ஜூலை 04, 2024 10:09

நடவடிக்கை கடுமையாக இல்லை என்றால் எல்லாமே வேஸ்ட் என்று தான் அர்த்தம்


V RAMASWAMY
ஜூலை 04, 2024 09:33

கோஷங்கள் போடுபவர்களுக்கு பதவியேற்பு கிடையாது என்று உத்திரவு போட்டு நடைமுறை படுத்துங்கள்.


ராஜவேல்,வத்தலக்குண்டு
ஜூலை 04, 2024 07:08

இன்னும் அஞ்சு வருஷம் இருக்கு அப்றம் பாத்துக்கலாம் யோவ் இப்ப அவனுக இப்படி பாராளுமன்றத்தை அவமதித்து இருக்கானுக அதுக்கு அவனுகளுக்கு என்ன தண்டனை அதை சொல்லுய்யா அத விட்டு அடுத்த ஐந்து வருடங்களுக்கு தாண்டி போயிட்ட?


Mani . V
ஜூலை 04, 2024 06:46

ஜனநாயக மரபுகளை குழிதோண்டி புதைப்பதில் கோபாலபுர வாழ்நாள் கொத்தடிமைகள் தான் சிறந்தவர்கள்.


Kasimani Baskaran
ஜூலை 04, 2024 05:24

அடிக்கடி அண்ணாவுக்கு நாமம் போடுபவர்களுக்கு பெரிய அளவில் சிரமம்.


ram
ஜூலை 04, 2024 03:49

காட்டுமிரான்டி கூட்டம் ... பணம் சுருட்டும் கூட்டம் தானே..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை