உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவை அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை: மாலத்தீவுக்கு உமர் அப்துல்லா குட்டு

இந்தியாவை அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை: மாலத்தீவுக்கு உமர் அப்துல்லா குட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: மாலத்தீவு இந்தியாவை அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாலத்தீவு சீனாவுடன் எந்த வகையான உறவு வைத்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இந்தியாவை அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாலத்தீவு அரசு விமர்சித்த அமைச்சர்களை சஸ்பெண்ட் செய்து இந்திய பிரதமரிடம் மன்னிப்பு கேட்டது நல்ல விஷயம்.மாலத்தீவு எந்த நாட்டுடன் எந்த மாதிரியான உறவில் இருக்க வேண்டும் என்பது அவர்களின் முடிவு. நமது நாட்டின் பிரதமர் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்தது முற்றிலும் தவறானது. அண்டை நாடுகளான மாலத்தீவு, நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நாம் நல்லுறவுடன் இருக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறவில்லை. இங்கு ஜனநாயகம் ஏன் படுகொலை செய்யப்படுகிறது?. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை