உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., உட்கட்சி விவகாரம் பற்றி அறிக்கை கேட்டேனா?: பியூஷ் கோயல் மறுப்பு

பா.ஜ., உட்கட்சி விவகாரம் பற்றி அறிக்கை கேட்டேனா?: பியூஷ் கோயல் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழக பா.ஜ., உட்கட்சி பூசல் மற்றும் பிரச்னைகள் பற்றி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விளக்க அறிக்கை கேட்டதாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும், முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்த விவகாரம் டில்லி தலைமை வரை சென்றது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மாநில பா.ஜ.,வின் மையக் குழு உறுப்பினர்களிடம் உட்கட்சி பூசல் மற்றும் மாநில அளவில் உள்ள பிற பிரச்னைகள் குறித்து அறிக்கை கோரியதாக செய்தி வெளியானது.இதனை பியூஷ் கோயல் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ''தமிழக பா.ஜ.,வில் நடக்கும் விஷயங்கள் குறித்து நான் விளக்க அறிக்கை கேட்டதாக வெளியான செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இது முற்றிலும் புனையப்பட்ட செய்தி. நான் தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் இல்லை; அரவிந்த் மேனன்தான் பொறுப்பாளர். அப்படி இருக்கையில், நான் எப்படி அறிக்கை கேட்டிருப்பேன்?'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஜூன் 13, 2024 14:55

திமுகவுக்கு அடுத்த கட்சி பற்றியே அதிக கவலை. சமூக வலைத்தளங்களில் திராவிடர்கள் ஓவராக பேசுகிறார்கள்


sethu
ஜூன் 13, 2024 14:32

சார் உங்களுக்கு உள்ள சிறந்த வேலையை பாருங்கள் ,தமிழகத்தில் உள்ள அரசியலை புரிந்துகொள்ள முடியாது தண்ணீர் அருந்தாமல் காத்திருக்கும் கூட்டம் அதிகம் ,அந்த நேரத்தில் பொழுது போகாமல் பலர் ஓசி பிரியாணிக்காக பசியில் கதைப்பார்கள் இவர்களுக்கு பதில் சொல்வதெல்லாம் கரடியின் முடியை எண்ணுவதுபோல .


sureshpramanathan
ஜூன் 13, 2024 12:50

Whoever published fake news warn those media that their licence will be cancelled Put some sense into all media companies especially Tamilnadu DMK media


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை