உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபாச கேள்வி கேட்ட வழக்கு: யு -டியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு பார்லி., குழு சம்மன்

ஆபாச கேள்வி கேட்ட வழக்கு: யு -டியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு பார்லி., குழு சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ஆபாச கேள்வி கேட்ட பிரபல யுடியூபர் ரன்வீர் அல்லாபாடியா மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் இன்று பாராளுமளன்ற தகவல் தொழில்நுட்ப பிரிவு குழு சம்மன் அனுப்பியுள்ளது.'இந்தியா காட் லேட்டன்ட்' என்ற பெயரில், சமூக வலைதளமான யு டியூபில் சமீபத்தில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில், பிரபல யு டியூபர் ரன்வீர் அல்லாபாடியா, நடுவர்களில் ஒருவராக பங்கேற்றார். அப்போது, போட்டியாளர் ஒருவரிடம் அருவருக்கத்தக்க வகையில் அவர் கேள்வி கேட்டார்.இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரானது. ரன்வீர் அல்லாபாடியாவுக்கு கண்டனம் தெரிவித்த பயனர்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அவர் மீது, ஏற்கனவே அசாமில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருடன் நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்ற ஆஷிஷ் சஞ்ச்லானி, ஜஸ்ப்ரீத் சிங், அபூர்வா மகிஜா, சமய் ரெய்னா ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று பாராளுமன்ற தகவல் தொழில்நுட்ப பிரிவு குழு ரன்வீர் அல்லாபாடியாவுக்கு சம்மன் அனுப்பி குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தவிர தேசிய மகளிர் ஆணையம் கொடுத்த புகாரின் பேரில் பேரில் ரன்வீர் அல்லாபாடியா மீது பாரதிய நீதி சட்டத்தின்-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

VENKATASUBRAMANIAN
பிப் 12, 2025 08:24

இவன் போன்றவர்களை காலம் முழுதும் உள்ளே தள்ள வேண்டும். பாவம் இவன் பெற்றோர்கள். இந்த கும்பல்களை உடனே உள்ளே போடவேண்டும். நாகரீகம் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் வாந்தி எடுக்கிறார்கள். இவர்களை பெற்றவர்கள் வெட்கப்பட வேண்டும்


நிக்கோல்தாம்சன்
பிப் 12, 2025 06:20

இவன் கேள்வி போன்றே படத்தை எடுத்த தயாரிப்பாளர் மீது என்ன வழக்கு போடுவார்கள் ?


J.V. Iyer
பிப் 12, 2025 04:53

தமிழ் நாட்டில் ஹிந்துக்களை, கோவில் குருக்கள்களை கொடுமைப்படுத்துகிறார்கள். இவர்களை கேட்க நாதி இல்லையா?


theruvasagan
பிப் 11, 2025 20:15

காலில் இருப்பதை கழட்டி அடிச்சா அதையும் பிரபலமாவதற்கான வழி என்று கூட இந்த மாதிரி கேடு கெட்டவனுக எடுத்துக் கொள்ளுவானுக.


sankaran
பிப் 11, 2025 20:12

ஆபாச சினிமா மட்டும் எடுக்கலாமா?.. சுதந்திரம் என்ற பெயரில்...


தாமரை மலர்கிறது
பிப் 11, 2025 19:55

இந்தியாவை பற்றி யாராவது தவறாக பேசினால், ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்க வேண்டும் .


இளந்திரையன் வேலந்தாவளம்
பிப் 11, 2025 19:52

இந்த ஆள் யாருன்னே தெரியலே இனி google search செய்து பிரபலம் ஆயிடுவார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை