மேலும் செய்திகள்
இந்தியா வளர வேண்டியது காலத்தின் கட்டாயம்: மோகன் பாகவத்
45 minutes ago
பெங்களூரு: பி.எம்.டி.சி., பஸ்களில் தனியாக பயணிக்கும் சிறார்களை கண்காணிக்கும்படி, ஓட்டுனர், நடத்துனர்களுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.பெங்களூரு, ஒயிட் பீல்டில் சில நாட்களுக்கு முன், 12 வயது சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல், பி.எம்.டி.சி., பஸ்சில் பயணித்து காணாமல் போனார். இது குறித்து ஒயிட் பீல்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தனிப்படை அமைத்து தேடிய நிலையில், ஹைதராபாதில் இருப்பது தெரிந்தது. போலீசார் அங்கு சென்று, சிறுவனை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.பி.எம்.டி.சி.,யில் பயணித்து மகன் காணாமல் போனது குறித்து, முதல்வர் சித்தராமையாவின் கவனத்துக்கு, சிறுவனின் பெற்றோர் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தை தீவிரமாக கருதிய முதல்வர், பி.எம்.டி.சி., பஸ்களில் தனியாக பயணிக்கும் சிறார்களை கண்காணிக்கும்படி உத்தரவிட்டார்.இதன்படி, 'பி.எம்.டி.சி., பஸ்களில் தனியாக செல்லும் சிறார்களை கண்காணிக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தால், அவர்களிடம் பொறுமையாக பேசி, அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.'ஒரு வேளை சிறார்கள் பதிலளிக்காவிட்டால், குழந்தைகள் சகாயவாணி எண் 1098ல் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்க வேண்டும். அல்லது சிறார்களை அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, ஒப்படைக்க வேண்டும்' என, ஓட்டுனர், நடத்துனர்களுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
45 minutes ago