உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திட்டமிட்டு பொய் பரப்பும் எதிர்க்கட்சிகள்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி குற்றச்சாட்டு

திட்டமிட்டு பொய் பரப்பும் எதிர்க்கட்சிகள்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'லோகோ பைலட்டுகள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன' என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லோகோ பைலட்டுகளுக்கு போதிய ஓய்வு வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் 34 ஆயிரம் பேர் ரயில்வேயில் பணி அமர்த்தப்பட்டனர். தற்போது 18 ஆயிரம் ஊழியர்களுக்கான ஆட் சேர்ப்பு பணிகள் நடைபெறுகிறது.லோகோ பைலட்டுகள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன. அவசர காலங்களில் மட்டுமே லோகோ பைலட்டுகளின் பணி நேரம் சற்று அதிகமாக இருக்கும். அவர்களின் பணி நேரம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. லோகோ பைலட்டுகளுக்கு பயணங்களுக்கு பிறகு ஓய்வு கொடுக்கப்படுகிறது. சராசரியாக ஜூன் மாதத்தில் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே பணி நேரம் உள்ளது. 2014ம் ஆண்டுக்கு பிறகு ரயில்களில் ரயில் ஓட்டுநர் அறை உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

veeramani
ஜூலை 11, 2024 10:01

ஒரு அரசு ஊழியன் கருத்து .. லோகோ பைலட்கள் ரயிலை இயக்கும் போது வேலை நேரம் சரியாக வ றாது மேலு இவர்கள் அத்திவாசியா பனி என்பதால் வேலை எரம் முன்னேபின்னே இருக்கும், எதிர்க்கட்சி தலைவர் வந்து ரயிலை வோட்டுவாரா ???? அரசியல்வாதிகள் அத்தியாவசிய பணிகளை பற்றி பேசவேண்டாம்


துக்ளக்பாபு
ஜூலை 10, 2024 19:26

யெஸ். கொரமாண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துன்னு ஒண்ணு நடக்கவே இல்லை. எதிர்க்கட்சிகளின் ஜூம்லா அது. நான் ரொம்ப திறமையானவன்.


வாய்மையே வெல்லும்
ஜூலை 10, 2024 17:26

வெளிநாட்டு புத்திய காட்ட ஆரம்பிச்சிட்டாரு. இனிமே ஜாக்கிரதையாக இல்லாட்டி ஏதாவது அடிக்கடி நடக்க வாய்ப்பு அதிகம் .


Balaji Radhakrishnan
ஜூலை 10, 2024 15:28

Bring the law for parliamentarians who give false statements.


Ramesh Sargam
ஜூலை 10, 2024 15:18

எதிர்க்கட்சிகளின் வேலையே அதுதான் அமைச்சரே நா யி ன் வாலை நிமிர்த்த முடியுமா அமைச்சரே…?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை