உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு விவகாரம்: லோக்சபாவில் ஒத்திவைப்பு: ராஜ்யசபாவில் அமளி

நீட் தேர்வு விவகாரம்: லோக்சபாவில் ஒத்திவைப்பு: ராஜ்யசபாவில் அமளி

புதுடில்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு துவங்கும்.

முடிவு

நீட் தேர்வு விவகாரத்தை லோக்சபாவில் எழுப்புவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வீட்டில் நேற்று( ஜூன் 27) ‛ இண்டியா' கூட்டணி கட்சியினர் ஆலோசனை நடத்தினர். அதில், இரு அவைகளிலும் நீட் தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து விவாதம் கோரி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி , இன்று பார்லி., இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கான கோரிக்கை கொடுக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p9prtp7u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

லோக்சபா

லோக்சபாவில், நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசும் போது, நீட் தேர்வு முறைகேட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என்றார்.தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி., சுப்ரியா சுலேவும், நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க வலியுறுத்தினார்.ஆனால் இதனை ஏற்க சபாநாயகர் ஓம் பிர்லா மறுத்துவிட்டார். இதனையடுத்து அமளி ஏற்பட்டதையடுத்து அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கூடியபோதும் அவையில் அமளி நிலவியது. இதனையடுத்து லோக்சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

ராஜ்யசபா

ராஜ்யசபாவில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை பா.ஜ., எம்.பி., துவங்க இருந்தார். நீட் முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கார்கே வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர். இது ஏற்கப்படாததால், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு அவை கூடியதும், மீண்டும் அமளி ஏற்பட்டது. அதேநேரத்தில் அவை தொடர்ந்து நடந்தது.

மயக்கம்

எதிர்க்கட்சிகள் அமளியின் போது காங்., எம்.பி., பூலோ தேவி மயக்கமடைந்தார். பார்லி., வளாகத்தில் டாக்டர்கள் முதலுதவி அளித்தனர். பிறகு மருத்துவமனையில் அனுமதித்தனர். மத்திய அரசை கண்டித்து பிஜூ ஜனதா தள எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Mohan
ஜூன் 28, 2024 20:20

நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சி தான். உச்ச நீதி மன்றம் நீட் தேர்வு அவசியம் என்றது. ப. சிதம்பரத்தின் மனைவி நீட் தேர்வு நீக்க வேண்டியதில்லை என்று வாதாடினார். நீட் தேர்வை நீக்க பா ஜ க வால் முடியாது. தி மு க வின் பிரமுகர்கள் யார் யார் மெடிக்கல் காலேஜ் வைத்து இருக்கிறார்களோ அவர்கள் சொல்படி காங்கிரசும் தி மு க வும் தேவையான அளவு அமளியும் கூச்சலும் போட்டாகிவிட்டது. முட்டாள்கள் போல இன்னும் முறைகேடு,முறைகேடுகளில் தான் தமிழ்நாடு அரசாங்கமே நடக்கிறது அது இது என்று நேரத்தை வீணாக்காமல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தால் ஏதாவது பலன் கிடைக்கலாம். லோக் சபா நேரத்தை வீணாக்காதீங்க 1


R SRINIVASAN
ஜூன் 28, 2024 18:29

நீட் தேர்வு வேண்டாமென்றால் கீழ்கண்ட நிபந்தனைகளை நாடு முழுவதும் அமல் படுத்தவேண்டும் ௧.தனியார் மருத்துவக்கல்லோரிகள் அரசுடைமையாக்கப்படவேண்டும் 2 தகுதி அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தேக்கப்படவேண்டும். ௩.கல்விக்கட்டணம் வருடத்திற்கு 10 lacs யை தாண்டக்கூடாது.


Lion Drsekar
ஜூன் 28, 2024 17:07

விவசாய நிலத்தில் வரும் வருமானத்தை விட பல லட்சம் கோடி வருமானத்தை அள்ளிஅள்ளி கொடுத்தது மருத்துவம் மற்றும் பொறியில் கட்டிடங்கள் . விமானங்கள் மற்றும் விமானங்களில் எல்லாமே பறந்தன. பல பேராசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து இரயிலில் இடம் பிடிப்பது போல் விற்று சம்பாதித்தனர். அது ஒரு தனி வாழ்க்கை . எல்லாமே மீண்டும் வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு எதுவும் இல்லை, வாழ்க அமளி . வந்தே மாதரம்


mbm.baba
ஜூன் 28, 2024 16:59

நீட் எழுதுவதை ஊக்கப்படுத்த முடியாத சூழல் காரணம் மாநிலத்துக்கு மாநிலம் ஊழல் மோசடி பரிட்சையை கண்காணிக்கும் நிலை மாற்றம். விடைத்தாள் உனக்கு 5லட்சம் கொடுத்து வாங்கி பரிட்சை என்று 5000 பேர் ஈடுபட்டால் கல்வியின் தரம் எப்படி இருக்கும். எனவே தேர்வு முறை மாநில அளவில் நிலவுவதே சிறப்பு. மோசடி கல்வி கற்றவர்கள் அவர்கள் மாநில அளவில் முடக்கு வார்கள். தமிழக மாணவர்கள் நன்மை அடைவார்கள். ஒரே தரம் என்ற தேசிய கொள்கை வினாத்தாள் மோடியால் மிக பெரிய மாநிலங்களான குஜராத் உபி பிகார் தலை நகர் டில்லி என பல மாநில கல்வி தேர்வு தரத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளது. இது ஒன்றல்ல இதற்க்கு முந்தய ஆண்டுகளிலும் நிகழ்ந்துள்ளது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.


JAYAKUMAR V
ஜூன் 28, 2024 16:31

மக்கள் வரிப்பணம் விரய ஆரம்பம்


ஆரூர் ரங்
ஜூன் 28, 2024 15:14

கோர்ட் உத்தரவின் படியே நீட் அமலாக்கப்பட்டது. பிடிக்காதவர்கள் சுப்ரீம் கோர்ட் செல்லட்டும் . பார்லிமென்ட் நேரத்தை வீணாக்க வேண்டாம்.


சந்திரசேகர்
ஜூன் 28, 2024 15:07

நீட் தேர்வு குளறுபடிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்


MADHAVAN
ஜூன் 28, 2024 15:02

நாடோடிக்கு இங்கு என்ன வேலைவேண்டிக்கிடக்கு ? ஆரியத்தை வேரறுக்கவேண்டிய நேரமிது, ஆப்கானுக்கு அப்பால் இந்த நான்குகால் ஆரியர்களை துரத்தி வேரறுக்கவேண்டும்


Vijayakumar Srinivasan
ஜூன் 29, 2024 04:47

ஆரியர்களைசெய்கிறபடி.மற்றமதவந்தேறிகளையும்செய்தால்நலமா.


ram
ஜூன் 28, 2024 14:28

நீட் எக்ஸாம் மாதிரி சட்ட படிப்புக்கும், இன்ஜினியரிங் படிப்புக்கும் வைக்கணும்,


Baalu
ஜூன் 28, 2024 15:20

Conduct exam for South Indians. Leak the question question papers to GUJARATHIS and BIHARIS


GMM
ஜூன் 28, 2024 14:12

மாணவர்களுக்கு மரியாதை அளிக்க நீட் முறைகேடு விவாதம் செய்ய ராகுல். அரசு அமைப்புகள் விசரணையில் உள்ள போது, விவாதம் ஏன்? மக்கள், நீதி, நிர்வாகத்திற்கு பயன் தரும் பொது சிவில் சட்டம் விவாதித்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கிருத்துவ, இஸ்லாமிய சிறுபான்மை அந்தஸ்தை நீக்குக.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ