உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அஜித், அஸ்வின், நல்லி குப்புசாமி, செப் தாமு உட்பட 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

அஜித், அஸ்வின், நல்லி குப்புசாமி, செப் தாமு உட்பட 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான விருதுகளை பெறுபவர்களின் பட்டியல் குடியரசு தினத்தை ஒட்டி நேற்று வெளியிடப்பட்டது.இதன்படி, மொத்தம் 139 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பத்ம விபூஷண் விருது ஏழு பேருக்கும், பத்ம பூஷண் விருது 19 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 113 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு பத்ம பூஷணும், 10 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின், புதுச்சேரி தவில் கலைஞர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.'தினமலர்' நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும், வரும் ஏப்ரல் மாதம் விருதுகள் வழங்கப்படவுள்ளன.விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

பத்ம விருதுக்கு தேர்வான முக்கிய நபர்கள்

பத்ம விபூஷண்எல். சுப்ரமணியம் இசை கர்நாடகாஎம்.டி.வாசுதேவன் நாயர்(மறைவுக்கு பின்) எழுத்தாளர் கேரளாஒசாமா சுசூகி(மறைவுக்கு பின்) தொழில் ஜப்பான்பத்ம பூஷண்சூர்ய பிரகாஷ் ஊடகம் கர்நாடகாஅனந்த் நாக் நடிகர் கர்நாடகாஜோஸ் சாக்கோ பெரியபுரம் மருத்துவம் கேரளாநல்லி குப்புசாமி தொழில் தமிழகம்பாலகிருஷ்ணா சினிமா ஆந்திராஸ்ரீஜேஷ் விளையாட்டு கேரளாஅஜித் குமார் சினிமா தமிழகம்ஷோபனா சந்திரகுமார் கலை தமிழகம்ராம்பகதுார் ராய் ஊடகம் உ.பி.,பத்ம ஸ்ரீடாக்டர் ஆர்.லட்சுமிபதி ஊடகம், கலை, கல்வி தமிழகம்குருவாயூர் துரை இசை தமிழகம்ஹூக் மற்றும் கேன்ட்சர்(மறைவுக்கு பின்) எழுத்தாளர் உத்தரகண்ட்ஐ.எம். விஜயன் விளையாட்டு கேரளாசெப் தாமு சமையல் கலை தமிழகம்எம்.டி.ஸ்ரீநிவாஸ் அறிவியல் மற்றும் பொறியியல் தமிழகம்தட்சிணாமூர்த்தி இசை புதுச்சேரிபுரிசை.கே.சம்பந்தன் கூத்து கலைஞர் தமிழகம்அஸ்வின் விளையாட்டு தமிழகம்சந்திரமோகன் தொழில் தமிழகம்ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி சிற்ப கலை தமிழகம்சீனி விஸ்வநாதன் இலக்கியம் தமிழகம்வேலு ஆசான் இசை தமிழகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

spr
ஜன 27, 2025 20:24

இயற்கை விவசாய முன்னோடி நம்மாழ்வாருக்கும் இன்னும் எத்தனையோ சாதனையாளர்களுக்கு ஒரு விருது வழங்கவில்லையே அஜித், செப் தாமு போன்றோருக்கு விருது தருமளவிற்கு அவர்கள் சமுதாயத்திற்குச் செய்த சாதனை என்ன? ஆனால் நல்லவேளை ஊழல் தலைவர், சிறையிருந்த சிங்கம், அஞ்சாநெஞ்சன் செந்தில் பாலாஜிக்கோ, மண்ணை உண்ட வாயன் பொன்முடிக்கோ விருது தராத வகையில் பாராட்டலாம்


V RAMASWAMY
ஜன 27, 2025 08:44

பாரத அரசின் உன்னத விருது பெரும் தமிழர்களுக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள். இன்னும் பல விருது பெற அதிக அளவில் தமிழர்கள் தகுதி பெற வேண்டுதல்.


naranam
ஜன 27, 2025 04:55

திராவிட ரத்னா பட்டம் ஞான சூனியம் ஈர வெங்காயத்திற்கு வழங்கலாம்.


Velan Iyengaar
ஜன 26, 2025 18:51

எப்பேர்ப்பட்ட ஒன்றிய விருதுகள் அதனோட மதிப்பை ....


என்றும் இந்தியன்
ஜன 26, 2025 18:22

உண்மையான விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நல்லவேளை இது திருட்டு திராவிட அறிவிலி மடியில் அரசின் விருது அல்ல


Velan Iyengaar
ஜன 26, 2025 17:59

தேங்காய் ...மாங்காய் .... பட்டாணி ... சுண்டெல் .....தேங்காய் .... மாங்காய் ... பட்டாணி ... சுண்டல் ......ஹி ஹி ஹி .....விருதுகளின் மதிப்பு இப்போ இவ்ளோ தான்


Mohan
ஜன 26, 2025 20:15

விடியல் சம்பள விசுவாசியே . இந்த மாதிரி நெஞ்செரிச்சல் கருத்து எழுதினால் உங்கள் மனக்கருப்பு தெளிவாக தெரிகிறது. நாடு தன மக்களுக்கு அங்கீகாரம் தருவது உங்களுக்கு அல்லது தனி மனிதனுக்கு பிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் நாட்டு அரசு தரும் விருதுகளுக்குமாவது மரியாதையை தாருங்கள்


Ray
ஜன 27, 2025 00:32

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி சக நடிகர் பட வசூலை தகர்க்க மோசமான விமர்சனம் செய்யும் கேவலத்தை கண்டோம் கால் கை பிடித்து வருமான வரி ஏய்க்கிற காட்சியும் காண்கிறோம் ஒரே அப்களில் ஒரு குடும்பத்துக்கே விருது கிடைத்ததையும் கண்டோமே சும்மாவா பீச் சுண்டல்


Barakat Ali
ஜன 26, 2025 14:32

விருதுக்குத் தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்...


K.n. Dhasarathan
ஜன 26, 2025 14:20

ஒன்றிய அரசு எதை செய்தாலும் சந்தேகக்கண்ணோடு பார்க்க வேண்டியுள்ளது, எப்போதும் போல இல்லாமல் இப்போது விருதுகள் அள்ளி கொடுப்பதின் பின்னணி ஆராயப்படணும், அதிலும் நல்லி குப்புசாமி ஏறத்தாழ 30 வருடங்களுக்கு மேலாக வியாபாரம் செய்பவர், கலைகளை ஆதரிப்பவர், இப்போதுதான் விருது கொடுக்கணுமா? பொழுது போக்கு கலையான சினிமாவுக்கு இத்தனை விருதுகளோ? அடுத்து ரொம்ப முக்கியமான விஷயம், மக்களுக்கு உயிர் வாழ அடிப்படை உணவு கொடுக்கும் விவசாயிகளுக்கு ஏன் விருது இல்லை? மருத்துவம், அறிவியல் போன்ற உயிர் காக்கும் துறைகளுக்கு போதுமான விருதுகள் ஏன் இல்லை? மிக மிக முக்கியமாக ராணுவத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை மறக்கலாமா? விருதுகள் கமிட்டி செயல்பாடுகள் கவலைக்குரியந . ஏன் என்றால் ஆட்சியில் இருப்போருக்கு பலனை தரக்கூடியவை, விமரிசனத்திற்கு உள்ளாக்கக்கூடாது.


Barakat Ali
ஜன 26, 2025 15:05

அவார்ட் வாபஸி அதாவது விருதுகளைத் திரும்பத்தரும் - கும்பலை ஆதரிச்சவனாச்சே நீயி ..... இப்ப ஏன் பொங்குற ????


Anbuselvan
ஜன 26, 2025 16:57

திரு நல்லி குப்புசாமி அவர்களுக்கு கொடுக்க பட்ட விருது பத்ம விபூஷண் ஆகும். அவருக்கு 2003 ஆம் ஆண்டே பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு விட்டது. இம்முறை விவசாயி திரு சுபாஷ் ஷர்மா அவர்களுக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுக்க பட்டது. 2016இல் நம்ம ஊர் விவசாயி திரு நம்மாழ்வார் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க பட்டது. உயிர் துறந்த ராணுவ வீரர்களுக்கு பரம்வீர் சக்ரா போன்ற உயரிய விருதுகள் தனியாக உள்ளது. தங்களது விமர்சனங்களுக்கு அடிப்படை இல்லை.


abdulrahim
ஜன 26, 2025 11:51

விருதுக்கு தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள் ,


ஆரூர் ரங்
ஜன 26, 2025 11:02

பிஜெபி எதிர்ப்பு அரசியலில் நுழைந்ததன் மூலம் அஜித் விருது வாங்க வழி செய்த JOSEPH விஜய்க்கு நன்றி.


சமீபத்திய செய்தி