உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் பிரதமர் மோடி உடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு; முக்கிய ஆலோசனை

டில்லியில் பிரதமர் மோடி உடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு; முக்கிய ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். எல்லையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இன்று (ஏப்ரல் 28) டில்லியில் பிரதமர் மோடியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். எல்லையின் சூழல் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நிலையில், இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சந்திப்பின் போது, பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என ராஜ்நாத் சிங்கிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பார்லி குழு கூட்டம்இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக, பாதுகாப்புத்துறை குறித்த பார்லி நிலைக்குழு கூட்டம், இன்று மதியம் 3 மணிக்கு நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rasheel
ஏப் 28, 2025 18:58

இங்க பல ஜி.......கள் ஊளை இடுவது கேட்கிறது.


Vijay D Ratnam
ஏப் 28, 2025 15:56

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க அருமையான ஒரு சந்தர்ப்பம் இப்போது கிடைத்து இருக்கிறது. இதைவிட்டுவிட கூடாது. ஜியோ பாலிடிக்ஸ் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும். இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. திருமாவளவன், சீமான், வேல்முருகன் போன்ற தேசத்துரோகிகள் நாடுமுழுக்க பெருமளவில் இருக்கலாம். பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங், ஜெயசங்கர், அஜித் தோவல், அமித்ஷா எனும் பலமான ஐந்து சிங்கங்கள் இருக்கும்போதே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தானியர்களை அவர்கள் நாட்டுக்கு துரத்திவிட்டு நிலப்பகுதி முழுவதையும் இந்தியாவோடு இணைக்கவேண்டும்.


abdulrahim
ஏப் 28, 2025 15:04

அதாவதுங்குறேன் , பாகிஸ்தான் பார்டர் பக்கம் இருக்குற மரங்களின் கிளைகளை எல்லாம் வெட்டி விட சொல்லணும் ,காத்து இல்லாம பாகிஸ்தான் அல்லாடட்டும்ங்குறேன் என்ன சொல்றிங்க ராஜ்


Haja Kuthubdeen
ஏப் 28, 2025 14:35

ஆறுன கஞ்சி பழங்கஞ்சின்னு சொல்வாங்க....தாக்குதல் நடந்த அடுத்த நிமிசமே தீவிரவாதிகள் முகாமை தேடிப்போய் அழிக்காமல் ஆலோசனை..ஆலோசனை...


TRE
ஏப் 28, 2025 14:06

கடைசி வரைக்கும் உருப்படியா ஏதும் செய்யமாட்டானுக நேருவையும் காங்கிரஸ்ஸையும் கடைசில பழி சொல்லுவாங்க ஏன்னா பிஜேபி யோட வரலாறு அப்படி வாகிபு சட்ட திருத்தத்தை திசை திருப்ப பிஜேபியோட நாடகம் இது


sirappalli suresh
ஏப் 28, 2025 13:43

எந்த நடவடிகையும் இருக்காது


saravanan
ஏப் 28, 2025 12:54

பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசின் கீழ் அணைத்து துறைகளிலும் முன்னேறி வரும் நம் பாரத நாட்டின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத பாக்கிஸ்தான் கோழைத்தனமாக இது போன்ற தீவிரவாத தாக்குதலை முன்னெடுக்கிறது உலக பொருளாதார வலிமையில் மூன்றாம் இடத்தை நோக்கி முன்னேற்றம், உள்கட்டமைப்பு முதல் உள்நாட்டு தொழில் துறை வரை சிறப்பான வளர்ச்சி, உலக அரங்கில் பிரதமர் மோடி மிகப்பெரிய சர்வதேச ஆளுமையாக உருவானது போன்ற பல்வேறு காரணங்களால் நம்நாடு அடைந்திருக்கும் புகழை தீவிரவாதம் மூலம் சீர்குலைக்க பார்க்கிறது பாகிஸ்தானிய அரசு அந்நாட்டின் இராணுவ தளபதியின் சமீபத்திய பேச்சுகள் இந்தியா மீது விஷத்தை கக்கியது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை. இந்தியாவுடன் நேருக்கு நேராக மோதி வெற்றிபெற முடியாத பாகிஸ்தானிய அரசு அவ்வப்போது கீழ்தரமாக ஈடுபடுவது இந்திய பாராளுமன்ற தாக்குதல், மும்பையில் அப்பாவி மக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல் மற்றும் தற்போது காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது மத ரீதியான, வெறித்தனமான தாக்குதல் போன்றவை. இதையெல்லாம் கட்டுப்படுத்த நாம் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் அணுகுமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். அதாவது இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளே சிறந்த பயனை தரும். எலிகளை போல வளைகளில் போய் பதுங்கிக் கொள்ளும் தீவிரவாத கும்பலை புகையை ஊதி பிடிப்பதை போன்றே வீழ்த்த வேண்டும் முன்பு கையாளப்பட்ட துல்லிய தாக்குதல்களும் Surgical strike நிச்சயம் பயனளிக்கும்.


Ramesh Sargam
ஏப் 28, 2025 12:54

சந்திப்பு, ஆலோசனை இதைவிட்டு வேறு எதுவும் உண்டா. அதான் பாகிஸ்தானுடன் போர். அதுதான் சிறந்த ஆலோசனையாக இருக்கும்.


பாமரன்
ஏப் 28, 2025 12:02

முக்கிய ஆலோசனைன்னு போட்டுட்டு .....


vivek
ஏப் 28, 2025 13:28

இந்த சின்ன கருத்துக்கு எல்லாம் 200 ரூபாய் கிடைக்காது. பெர்சா கருத்து போடு பகோடா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை