உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லிமென்டில் விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

பார்லிமென்டில் விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: 'எதிர்க்கட்சியினர் பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் ஓடுவதை விட விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்' என பா.ஜ., எம்.பி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.ஹிமாச்சல பிரதேசம், ஹமிர்பூரில் செய்தியாளர்களுக்கு அனுராக் தாக்கூர் அளித்த பேட்டி: பொதுமக்கள் எதிர்க்கட்சிகளை தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். ஆனால் அவர்கள் பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் ஓடுவதை விட விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் விவாதத்தில் இருந்து ஓடுவதை தவிர்க்க வேண்டும்.டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்துகிறேன். இந்திய அணி இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டது. இரண்டு சிறந்த கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட்டின் வெற்றிக்கு பங்கு வகித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

TSRSethu
ஜூலை 03, 2024 08:59

பார்லிமென்ட் விவாதங்களில் ராகுல் கலந்து கொண்டால் மிக சுவராஸியமான கருத்துக்கள் நமக்கு கிடைக்கும். ?


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 01, 2024 09:23

ஜனநாயகத்தை மதித்து விவாதங்களில் பங்கேற்க அவர்களுக்குத் தெரியாது ......


சுபத்திரா
ஜூன் 30, 2024 22:11

ஆம். வந்து ஜீ க்கு ஜே போடணும். இல்லேன்னா மைக்கை ஆஃப் பண்ணிருவோம்.


M Ramachandran
ஜூன் 30, 2024 19:36

அவர்கள் மக்களால் தேர்தெடுக்க பட்டுள்ள காரியாத்தை மறந்து சபையய் நடக்க விடாமல் செய்வது தானே அவர்கள் குறி. நாடு முன்னேற பல மாசோதாக்கள் நிறை வேற்ற வேண்டும் அதை தடுக்க தானே முனைப்பு காட்டுகிறார்கள். மகா பிரயத்தனம் செய்கிறார்கள். நல்ல ஜனநாயகம்


கூமூட்டை
ஜூன் 30, 2024 16:50

மக்கள் கூமூட்டை என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க வளமுடன் அகண்ட ஊழல் வாதிகள்


Senthoora
ஜூன் 30, 2024 16:31

எதிர்க்கட்ச்சிகள் பேசும்போது, மைக் ஆப் செய்யாதீர்கள். கூச்சல் போடாதீர்கள். அவர்கள் சொல்வதை கேளுங்க.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ