உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி மரணம்

ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி மரணம்

பாலக்காடு; ரயிலின் படிக்கட்டில் நின்று பயணித்தவர், வழுக்கி விழுந்து தண்டவாளத்தில் சிக்கி இறந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஸ்ரீகிருஷ்ணாபுரம் கரிம்புழை பகுதியை சேர்ந்த உண்ணி நம்பீசனின் மகன் கிருஷ்ண சந்திரன், 35. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.இந்நிலையில், வேலை தொடர்பாக தமிழகத்துக்கு சென்றார். அதன்பின், பாலக்காடுக்கு ரயிலில் வந்தார். நேற்று நள்ளிரவு, 1:30 மணிக்கு, வாளையார் சந்திராபுரம் அருகில் ரயிலில் வந்த போது, ரயிலின் படிக்கட்டில் நின்று பயணித்தார்.அப்போது, திடீரென கால் வழுக்கி தண்டவாளத்தில் விழுந்தார். இதை கண்ட சக பயணியர் ரயில்வே அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். அதன்பின், கஞ்சிக்கோடு தீயணைப்பு படையினர் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, தண்டவாளப்பகுதியில் அவர் உயிரிழந்து கிடந்தார்.சடலத்தை மீட்டு, பிரேத சோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து, வாளையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை