உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்: பவன் கல்யாண் விருப்பம்

கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்: பவன் கல்யாண் விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: '' இங்கிலாந்தில் இருக்கும் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். அது நமது நாட்டுக்கு சொந்தமானது, '' என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார்.இங்கிலாந்து ராணி கிரீடத்தில் அலங்கரித்த கோஹினூர் வைரம் 1849 ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தான் இருந்தது. அதன் பின்னர் பிரிட்டிஷ் படைகள் இந்தியாவை கைப்பற்றிய உடன் அவை இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு 1850 ம் ஆண்டு விக்டோரியா மகாராணியிடம் வழங்கப்பட்டது.இந்த வைரம் 105 காரட் மதிப்பு கொண்டது. தற்போது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த வைரத்தை மீட்க வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியதாவது: கோஹினூர் வைரத்தை பற்றி நாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு பேசுவது. அந்த வைரம் எங்கிருந்து வந்தது. இந்த வைரம் கல்லாக, கிருஷ்ணா நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்படிப்பட்ட கருவூலம், பிறகு முகலாயர்கள் கைகளுக்கும், பிறகு ஆங்கிலேயர் கைக்கும் சென்று இங்கிலாந்தில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.அது இந்தியாவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அது நமது நாட்டுக்கு சொந்தமானது என தனிப்பட்ட முறையில் நான் கருதுகிறேன். பாரதத்துக்கு சொந்தமானது. அது நமது மனதிலும், ஆன்மாவிலும் நிறைந்துள்ளது. அதனை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.இந்தியா எந்த நாட்டையும் தாக்கியது கிடையாது. யார் மீதும் அத்துமீறியது கிடையாது. ஆனால், ஒவ்வொருவரும் இந்தியாவை எடுத்துக்கொள்ள நினைத்தனர். தாக்குதல, அத்துமீறலில் ஈடுபட முயற்சித்தனர். முகலாயர்களை கொண்டாடும் புத்தகங்கள், அவர்கள் நமது நாட்டு மன்னர்கள் மீது கையாண்ட அடக்குமுறைகளை வெளிக்கொண்டு வர மறுத்துவிட்டது.நமது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் புத்தகத்தை படித்தால், முகலாயர்களை சிறந்தவர்கள் என எத்தனை நாட்களுக்கு படிக்க வேண்டும். அவர்களால் நமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? அவர்களால் ஏற்பட்ட அடக்குமுறைகள் பற்றியும், அதனால் அடைந்த துன்பம் பற்றியும் நாம் படித்தது கிடையாது. அக்பர், அவுரங்கசீப் சிறந்தவர்கள் எனக் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்தது பற்றி கூறுவது கிடையாது. அவர்களை எதிர்த்து நமது நாட்டு மன்னர்கள் தைரியத்துடன் போராடியது குறித்து சொல்லப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
ஜூலை 22, 2025 21:20

அடுத்த ஐந்தாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் பத்து ட்ரில்லியன் டாலராக உயரும். அப்போது இங்கிலாந்து தானாக முன்வந்து கோஹினூரை மோடியிடம் ஒப்படைக்கும்.


முருகன்
ஜூலை 22, 2025 19:20

தற்போது கோகினூர் வைரம் இந்தியாவிற்கு வந்தால் நாட்டில் வறுமை ஒழிந்து விடுமா? இவர் பேசுவது அனைத்தும் ஓட்டு அரசியல்


Shankar
ஜூலை 22, 2025 19:10

பவன் கல்யாண் சொல்வது முற்றிலும் ஏற்புடையதே.


sankaranarayanan
ஜூலை 22, 2025 18:54

இங்கிலாந்தில் இருக்கும் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறி அதை கொண்டுவந்தால் தமிழகம்தான் மிக பழைய நாடு அதுதான் இந்த வைரத்திற்கு சொந்தம் என்று கூறி இந்த திராவிட மாடல் அரசு அதற்கு உரிமை பாராட்டி அதை கொண்டு வந்த உடனேயே கோபாலபுரத்தில் வைத்துவிட்டு அமைச்சர் சேகர் பாபுவிடம் கொடுத்து அதை காசாக மாற்றி அந்த பணத்தை வங்கியில் போட்டு வட்டி வரும்படி செய்து விடுவார்களே ஜாக்கிரதை பவன் கல்யாண்


ராஜா
ஜூலை 22, 2025 18:43

இப்படி பல விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டே பேசி வருகிறார்.


Sudha
ஜூலை 22, 2025 17:59

அப்படியே இந்தியா இங்கிலாந்தை ஆள வேண்டும் என்று ஆசைப்படுங்கள்


பிரேம்ஜி
ஜூலை 22, 2025 17:51

அது அப்புறம் பார்க்கலாம்! முதலில் விலைவாசி ஏற்றம், சாலை மேம்பாடு, கல்வி, மருத்துவ வசதி இதை மேம்படுத்த ஏதாவது செய்யுங்கள்!


புதிய வீடியோ