உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 46 ஆண்டாக எரிந்த விளக்குகள் அணைந்ததால் மக்கள் கலக்கம்

46 ஆண்டாக எரிந்த விளக்குகள் அணைந்ததால் மக்கள் கலக்கம்

உத்தரகன்னடா: சிகள்ளி கிராமத்தில், தீபநாதேஸ்வரா கோவிலில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் இல்லாமல், திரி இல்லாமல் எரிந்து கொண்டிருந்த மூன்று விளக்குகள், திடீரென அணைந்துள்ளன. இதனால் கர்நாடகாவுக்கு கெடுதல் ஏற்படுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.உத்தர கன்னடா மாவட்டம், முண்டகோடு தாலுகாவின் சிகள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதம்மா. இவர் தீபநாதேஸ்வரா கோவிலில், 1979ல் மண்ணெண்ணெய் ஊற்றி, ஒரு சிம்னி விளக்கை ஏற்றி வைத்தார். இந்த விளக்கு அணையவே இல்லை. எண்ணெய், திரி இல்லாமலேயே தொடர்ந்து எரிந்தது. இதை பார்த்து ஆச்சரியமடைந்த அவர், 1980ல் மற்றொரு விளக்கை ஏற்றினார்.இரண்டாவது விளக்கும் அணையாமல் எரிந்தது. இந்த விளக்கை ஏற்றிய இரண்டு வாரங்களுக்கு பின், மூன்றாவதாக விளக்கை ஏற்றினார். அதிசயதக்க வகையில், மூன்று விளக்குகளும் தொடர்ந்து எரிந்தன.கடந்த 1979 முதல் 2025 பிப்ரவரி வரை, 46 ஆண்டுகள் எண்ணெய் இல்லாமல், திரி இல்லாமல் எரிந்து கொண்டிருந்தன. இது கடவுளின் அருள் என, மக்கள் நம்பினர்.விளக்குகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை, அர்ச்சகர் வெங்கடேஷ் ஏற்றிருந்தார். அவர் 14 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன் காரணமாக, கோவில் நடைமூடப்பட்டிருந்தது.நேற்று முன் தினம் நடை திறந்தபோது, மூன்று விளக்குகளும் அணைந்திருந்தன. 46 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த விளக்குகள் திடீரென அணைந்ததால், கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.மாநிலத்துக்கு கெடுதல் நடக்குமோ என, அஞ்சுகின்றனர். இதே பயத்தில் கோவில் நடையை மீண்டும் மூடிவிட்டனர். பக்தர்கள் தரிசனத்துக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Bhaskaran
பிப் 09, 2025 19:35

அர்ச்சகர் யாருக்கும் தெரியாமல் எண்ணை ஊற்றியிருப்பார் அவர் இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லவில்லை போலும் .


வாய்மையே வெல்லும்
பிப் 12, 2025 22:37

உங்களுக்கு தெரிஞ்ச விஷயம் பாவம் மக்களுக்கு தெரியாம போயிற்றே அய்யகோ உங்களை கண்டு பரிசுகொடுக்காமல் இருக்க முடியவில்லை. மூன்றில் ஒன்று கேளுங்கள். ஒன்று குச்சி ஐசு. இரண்டு லப்பார் பந்து மூன்று பொரிஉருண்டை.. ம்ம் என்ன தயக்கம் இப்போதே கேளுங்கள் ஐயா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை