உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி

வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி: உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று (மே 14) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார் பிரதமர் மோடி. ஜூன் 1ம் தேதி, 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே (மே 14) கடைசி நாள் என்பதால், இன்று பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய வாரணாசி வந்தார். முன்னதாக அவர் கங்கை ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v59vgw9y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர், வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை உறுதிமொழி படிவத்தை படித்து உறுதியளித்துவிட்டு, தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சுந்தர்லால்
மே 14, 2024 20:48

3.6 கோடிக்கு சொத்து இருக்கு ஹைன். ஒரு சைக்கிள் கூட வாங்க போதாது ஹைன். என்னைப்போல ஏழைகளின் பங்காளி ஹைன்.உங்க கூடவே 24 மணி நேரமும்.இருப்பேன் ஹைன்.


Ramanujadasan
மே 14, 2024 14:02

தினமலருக்கு ஒரு வேண்டுகோள் முன்பு MGR ஜெயித்த பொது நீங்க போட்ட தலைப்பு "வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும்" MGR பெரிய ரோஜாப்பூ மலையோடு இருப்பர் அதே போல ஜூன் ஐந்தாம் தேதியும் மோடி புகைப்படத்தோடு மாலையோடு, இந்த வரிகளையே போட்டு பிரசுரிக்கவும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 14, 2024 14:52

சபாஷ் சரியான கருத்து


Ramanujadasan
மே 14, 2024 12:47

பிஜேபி ந்த முறை தனியாக குறைந்த பக்ஷம் முன்னூற்றி இருபத்தி ஐந்து தொகுதிகளில் வெற்றி பெறும் பெட் கட்டுவோர் வரிசையில் வரவும் கண்ணீர் விட்டு புலம்பி கதறும் ஊழல் உடன் பிறப்புகளும், கொள்ளைக்காரர்களும், மத மாற்றிகளும், மத வெறியர்களும் விலக்கு


Ramanujadasan
மே 14, 2024 12:44

"வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் " " அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன் நேர்மையை, தேசபக்தியை, மத பற்றை சேரும் "


Ramanujadasan
மே 14, 2024 12:35

ஜய விஜயீ பவா


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை