உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவாவில் 77 அடி உயர வெண்கல ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

கோவாவில் 77 அடி உயர வெண்கல ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பனாஜி: கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில், 77 அடி உயர வெண்கல ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே உயரமான இந்த சிலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கல சிலை, இன்று (நவம்பர் 28) புனித பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்றது. இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.நொய்டாவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி ராம் சுதாரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ராமர் சிலை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மடத்தால் உருவாக்கப்பட்ட ராமாயண தீம் பார்க் கார்டனையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவை முன்னிட்டு பத்ரிநாத்திலிருந்து கோவா வரை ஒரு பிரமாண்டமான ஸ்ரீ ராம யாத்திரை நடைபெற்றது. விழாவில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை