உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் இன்று( நவ.,25) பிரதமர் மோடி காவிக்கொடி ஏற்றினார். முன்னதாக, ரோடு ஷோ வந்த அவருக்கு அயோத்தி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அயோத்தி ராமர் கோவிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது 30 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வந்தார். இதன் பிறகு காவிக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.

ரோடு ஷோ

முன்னதாக, ராமர் கோவில் செல்லும் பாதையில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தினமலர் நேரலை ஒளிபரப்பு

அயோத்தி ராமர் கோவில் கொடியேற்றும் விழாவை நேரலையில் பார்க்க இங்கே கிளக் செய்யவும்.https://www.youtube.com/watch?v=clSQObskL_s

மிக்க மகிழ்ச்சி

கொடியேற்ற விழா குறித்து, ராமர் கோவிலில் பணியாற்றும் பெண்கள் கூறியதாவது: ராமர் கோவிலில் 25 பெண்கள் வேலை செய்கிறோம். எங்கள் கடின உழைப்பு வெற்றி பெற்றது. இது போன்ற விஷயங்கள் எங்கள் காலத்தில் நடப்பதும், அதனை காண வாய்ப்பு கிடைத்ததும் எங்களுக்கு மகிழ்ச்சி என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

பாலாஜி
நவ 25, 2025 14:53

நரேந்திரமோடி காவி உடை அணிந்து காவி கொடி ஏற்றி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.


Arjun
நவ 25, 2025 13:51

ஜெய் ஸ்ரீராம் ,ஜெய் ஹிந்த்


SENTHIL NATHAN
நவ 25, 2025 13:27

மோகண் பகவத்தை இனி மேல் இந்த அரசு தவிர்க்க வேண்டும். அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா அவர்களை கட்டாயம் அழைத்து இருக்க வேண்டும்


RAMESH KUMAR R V
நவ 25, 2025 13:08

இந்த நிகழ்வுகளை காணும் நாம் பாக்கியவான்கள்.


laks giri
நவ 25, 2025 12:23

Jai sri ram


laks giri
நவ 25, 2025 12:22

ஜெய்ஸ்ரீ ராம்


Modisha
நவ 25, 2025 11:27

போலி திராவிடர்களுக்கு புலம்ப இன்னும் ஒரு சான்ஸ் .


Indian
நவ 25, 2025 15:08

சும்மா இருக்க மாட்டாயா ??


Rathna
நவ 25, 2025 11:09

அயோத்தி ராஜ்யத்தின் கொடி, வால்மீகி இராமாயணத்தில் முழுவதும் விவரிக்கப்பட்டு உள்ளது. வால்மீகி முனிவர் ராமன் காலத்தில் வாழ்ந்தவர். மஹாபாரத காலத்தில் வாழ்ந்த அயோத்திய மன்னன் பிருஹத்பாலன், மஹாபாரத போரில் இறந்தார். ராமனுடைய இஷ்வாகு குலத்தின் ஆட்சி மஹாபாரத போருடன் முடிவடைந்தது. அதற்கு பின்னால் அயோத்திய நாடு ராமனுடைய இஷ்வாகு குலம் அல்லாத வேறு பல மன்னர்களால் ஆளப்பட்டது, நாட்டின் கொடியும் மாற்றப்பட்டது. ஆனால் இந்த கொடி, ராஜஸ்தான் மாநிலத்தில் மேவார் ராஜ்யத்தில் ஒரு ஓவியத்தில் லலித் மிஸ்ரா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஓவியம், வால்மீகி இராமாயணத்தில் விவரிக்கப்பட்டபடி, இருந்ததை கண்டு அறிஞர்கள் அறிவுரைப்படி, அதுதான் ராமனுடைய அயோத்தியாவின் கொடி என்று தீர்மானிக்கப்பட்டு இப்போது பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மீண்டும் நிறுவப்படுகிறது. இந்த கொடியில் ராமனின் குல முன்னோரான சூரிய பகவான், ஓம் என்னும் உலக ஆரம்பத்தில் உண்டான பிரணவ சொல் மற்றும் கோவிதார் மரம் எனப்படும் செம்மந்தாரை மரம் போன்றவைகள் உள்ளது. கோவிதார் எனப்படும் செம்மந்தாரை மரம் பாரிஜாதம் மற்றும் மந்தாரை மரத்தின் ஹைபிரிட் கூட்டு மரமாகும். இந்த மரத்தை ஹைபிரிட் முறையில் உருவாக்கியவர் காஷ்யப முனிவர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே மரங்களை கூட்டு அல்லது ஹைபிரிட் முறையில் உருவாக்கும் அறிவியல் அப்போதே இருந்து இருக்கிறது அதிசயம் தான்.


அப்பாவி
நவ 25, 2025 11:00

இந்தி தெரிஞ்ச தமிழண்டா...


Anand
நவ 25, 2025 11:26

தமிழன் என முக்காடு போட்ட அந்நிய மொழி/மதமாரிகளின் மத்தியில் ஹிந்தி தெரிந்த தமிழன் இருப்பதில் பெருமையே.


vivek
நவ 25, 2025 11:38

அறிவாலய அடிமையே தான்


Kumar Kumzi
நவ 25, 2025 13:18

வயிறெறிஞ்சி....


Anand
நவ 25, 2025 10:16

ஜெய் ஸ்ரீராம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை