மேலும் செய்திகள்
பார்லி.,யில் நேற்று...
2 hour(s) ago
எஸ்.ஐ.ஆர்., விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள் அடம்
2 hour(s) ago
சீமானுக்கு சம்மன் வழங்க போலீசார் சென்னை விரைவு
3 hour(s) ago
புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
4 hour(s) ago
புதுடில்லி: இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தின் சிறந்த சேவையும், தொலைநோக்குப் பார்வையும் பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த நாளன்று அவருக்கு மரியாதை செலுத்துவோம். சுதந்திர போராட்டத்தில் தீவிர பங்களிப்பை கொடுத்து, அரசியலமைப்பு சபையின் தலைவராக பணியாற்றியதில் இருந்து, முதல் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்துள்ளார். ஈடு இணையற்ற கண்ணியம், அர்ப்பணிப்பு மற்றும் தெளிவான நோக்கத்துடன் நாட்டிற்காக சேவை செய்துள்ளார். எளிமை, தைரியம் மற்றும் தேசிய ஒற்றுமையால் அவரது நீண்ட கால பொது வாழ்வு இருந்தது. அவரது சிறந்த சேவையும், தொலைநோக்குப் பார்வையும் பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago