ஜன., 1 அதிகாலை 2 மணி வரை பி.எம்.டி.சி., பஸ் சேவை
பெங்களூரு: புத்தாண்டு அன்று அதிகாலை 2:00 மணி வரை, எம்.ஜி.,ரோடு, பிரிகேட் ரோட்டில் இருந்து நகரின் 13 இடங்களுக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன.புத்தாண்டை வரவேற்க பெங்களூரு நகரம் தயாராகி வரும் நிலையில், நாளை இரவு முதல் எம்.ஜி., ரோடு, பிரிகேட் ரோடுகளில் கூட்டம் களைகட்டும். புத்தாண்டை வரவேற்ற பின், பப், பார்களில் கொண்டாடியவர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு வசதியாக 1 ம் தேதி அதிகாலை 2:00 மணி வரை, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் பி.எம்.டி.சி., நிர்வாகமும் புத்தாண்டு அன்று அதிகாலை 2:00 மணி வரை, பயணியருக்கு சேவை செய்ய உள்ளது.நாளை இரவு 11:00 மணி முதல் 1ம் தேதி அதிகாலை 2:00 மணி வரை, பிரிகேட் ரோடு - எலக்ட்ரானிக் சிட்டி, பிரிகேட் ரோடு - ஜிகனி ஜி4, எம்.ஜி.,ரோடு - சர்ஜாபூர் ஜி2, எம்.ஜி., ரோடு - கெங்கேரி கே.ஹெச்.பி., குடியிருப்பு ஜி6;எம்.ஜி., ரோடு - ஜனபிரியா லே - அவுட் ஜி7, எம்.ஜி., ரோடு - நெலமங்களா ஜி8, எம்.ஜி., ரோடு - எலஹங்கா சப்அர்பன் பேஸ் 5 க்கு ஜி9, எம்.ஜி., ரோடு - எலஹங்கா ஜி10, எம்.ஜி., ரோடு - பாகலுார் ஜி11, எம்.ஜி., ரோடு - ஹொஸ்கோட் 317ஜி, எம்.ஜி., ரோடு - சன்னசந்திரா எஸ்.பி.எஸ்., - 13 கே, எம்.ஜி., ரோடு - பனசங்கரி இடையே 13 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.மெஜஸ்டிக் பஸ் நிலையம், கே.ஆர்., மார்க்கெட், சிவாஜிநகர், கோரமங்களா, காடுகோடி, கெங்கேரி, சும்மனஹள்ளி, கோரகுண்டேபாளையா, எலஹங்கா, சாந்திநகர், பனசங்கரி, ஹெப்பால், சென்ட்ரல் சில்க் போர்டு பகுதிகளில் இருந்து, பயணியர் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பஸ்கள் இயக்கவும் பி.எம்.டி.சி., முடிவு செய்து உள்ளது.