உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யார்-னு தெரியாம அடிசசிட்டோம் சார் :பீகார் போலீஸ் சப்-கலெக்டரிடம் சமரசம்

யார்-னு தெரியாம அடிசசிட்டோம் சார் :பீகார் போலீஸ் சப்-கலெக்டரிடம் சமரசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா:இட ஒதுக்கீடு கோரி நடந்த போராட்டத்தின் போது, தடியடி நடத்திய போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட வந்த மாவட்டசப் கலெக்டரையும் லத்தியால் தாக்கிய சம்பவம் பீஹாரில் நடைபெற்றது. இதனையடுத்து யார்-னு தெரியாம அடிசசிட்டோம் சார் என சப் கலெக்டரிடம் போலீசார் சமரசமாக செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கோரி பல்வேறு தலித் அமைப்புகள் நாடு தழுவிய பந்த்திற்கு அழைப்பு விடுத்தன. இதில் பீஹார் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று ( ஆக.,21) போராட்டங்கள் நடைபெற்றன.இதில் பீஹாரில் முக்கிய தலித் அமைப்பான பீமா ஆர்மி என்ற அமைப்பினர் பாட்னாவின் டாக்பங்களாசவுக் என்ற பகுதியில் சாலை மறியல் செய்தனர்.இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு குவிக்கப்பட்ட போலீசார் திடீரென தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டினர்.அப்போது சம்பவ இடத்தை பார்வையிட வந்த மாவட்ட சப் கலெக்டர் மீதும் போலீசார் லத்தியால் தாக்கினர். இதன் வீடியோ இணைய தளத்தில் வெளியானது.இது குறித்து மாவட்ட எஸ்.பி. ராஜிவ் மிஸ்ரா கூறுகையில், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கூறியும் கேட்காததால் தடியடி நடத்தப்பட்டது. அப்போது துணை கலெக்டர் என்பது கூட தெரியாமல் அவரையும் போலீசார் தாக்கிவிட்டனர். தவறு நடந்துவிட்டது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
ஆக 21, 2024 23:48

சப் கலெக்டர் போலீஸ் பாதுகாப்பில்லாமலா ரகளை ஸ்பாட்க்கு வந்தார்.??


அப்பாவி
ஆக 21, 2024 22:12

ஏன்? ஆய்வு செய்ய மாறுவேஷத்தில் போனாங்களாமா?


gmm
ஆக 21, 2024 21:43

பீமா ஆர்மி என்ற பெயர் கூடாது.இந்தியன் ஆர்மி உள்ளது. சட்ட பூர்வ பெயர் பதிவிற்கு கொள்கை தேவை. போலீஸ் சப் கலெக்டர் மீது தடியடி நடத்தியது போல் பார்வையிடும் அமைச்சர் மீது ஏன் கவுன்சிலர் மீது கைவைக்க முடியுமா? கலெக்டருக்கு பாதுகாப்பு சட்ட பூர்வமாக கொடுக்க வேண்டும். நீதிமன்றம் அந்த போலீஸை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு, சிறுபான்மை அந்தஸ்து நீக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டின் ஒற்றுமை குறைந்து விடும்.


Ramesh Sargam
ஆக 21, 2024 20:53

சொல்லமுடியாது... ஏதாவது பழைய பகையா கூட இருக்கலாம்... பழிதீர்த்து செட்டில் பண்ணிட்டாங்க போலீஸ்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை