உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரயில் 2 மாதங்களில் தமிழக அரசிடம் அறிக்கை

பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரயில் 2 மாதங்களில் தமிழக அரசிடம் அறிக்கை

'கர்நாடக மாநிலம், பொம்மசந்திரா - தமிழகத்தின் ஓசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்திய கூறு ஆய்வு அறிக்கை, அடுத்த இரண்டு மாதங்களில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கர்நாடக தலைநகர் பெங்களூரும், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரமும் அருகருகே அமைந்திருப்பதால், தினமும் லட்சக்கணக்கான மக்கள் இரு நகரங்களுக்கும் பயணிக்கின்றனர். தொழில் நகரமான ஓசூரில் இருந்து பெங்களூரை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான முன் முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ளும் என அறிவித்தது.இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான, சாத்திய கூறு அறிக்கையை தயாரிக்க தனியார் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த ஜன., மாதத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டது.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:பொம்மசந்திரா - ஓசூர் இடையே 20 கி.மீ., நீளத்திற்கு புதிய மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் 8 கி.மீ., மற்றும் கர்நாடகாவில் 12 கி.மீ., என இரு மாநிலங்களை இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ ரயில் திட்டம் இருக்கும்.பல்வேறு போக்குவரத்து நெரிசல், தற்போதுள்ள பயணியர் தேவை, அடுத்த 30 ஆண்டு காலத்திற்கான பயணத் தேவை, இரு நகரங்களின் மக்கள் தொகை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைவிடங்கள் உள்ளிட்ட விபரங்கள் அறிக்கையில் இடம் பெறும்.இந்த சாத்தியக்கூறு அறிக்கையில் தற்போது 50 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த அறிக்கை தயாரிப்பு பணி முடித்து, ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை