| ADDED : நவ 28, 2025 04:37 PM
லக்னோ: ''இன்றைய மக்கள் படிப்பறிவு மிக்கவர்களாகவும், தொழில்நுட்ப ஆர்வலர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், இந்த முன்னேற்றத்துடன், மன அழுத்தமும் மற்றும் தனிமையுடன் சேர்ந்துள்ளது'', என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிரம்ம குமாரிகள் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:உலகம் பல சவால்களை சந்தித்து கொண்டுள்ள நிலையில், வசுதைவ குடும்பகம் ( உலகமே ஒரு குடும்பம்) என்ற இந்தியாவின் கொள்கையே இன்று பொருத்தமானதாக உள்ளது. இந்தியாவின் பண்டைய நாகரிகமும், கலாசாரமும் முழு உலகிற்கும் ஆழமான செய்திகளை வழங்கியுள்ளன. முழு உலகமும் நமது குடும்பம் என வலியுறுத்துகின்றன. இன்று, உலகம் பல சவால்களை எதிர்கொள்வதால், இந்த செய்திகள் முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானதாக உள்ளது. இன்றைய மக்கள் படிப்பறிவு மிக்கவர்களாகவும், தொழில்நுட்ப ஆர்வலர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், இந்த முன்னேற்றத்துடன், மன அழுத்தமும் மற்றும் தனிமையுடன் சேர்ந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.