உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று சபரிமலை செல்கிறார் ஜனாதிபதி

இன்று சபரிமலை செல்கிறார் ஜனாதிபதி

திருவனந்தபுரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி கேரளாவில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நான்கு நாள் பயணமாக ஜனாதிபதி முர்மு, கேரள மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான இன்று அவர் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்கிறார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் சென்று, அங்கிருந்து காரில் பம்பை செல்கிறார். அங்கிருந்து இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் கோவிலுக்கு செல்கிறார். ஜனாதிபதி ஒருவர், தன் பத வி காலத்தில் சபரிமலைக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். ஜனாதிபதி சபரிமலைக்கு வருவதையொட்டி இரண்டு நாட்கள், பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த இரண்டு நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டது. மேலும் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து, கேரள கவர்னர் மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் சிலையை அவர் நாளை திறந்து வைக்கிறார். இதைத் தவிர, மேலும் சில நிகழ்ச்சி களிலும் அவர் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்