உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனாதிபதியின் உரையில் தொலைநோக்கு பார்வை இல்லை: கார்கே பேச்சு

ஜனாதிபதியின் உரையில் தொலைநோக்கு பார்வை இல்லை: கார்கே பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஜனாதிபதியின் உரையில் தொலைநோக்கு பார்வையோ, வழிகாட்டுதலோ இல்லை' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.ஜனாதிபதி திரவுபதி முர்மு உரைக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராஜ்யசபாவில் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: ஜனாதிபதியின் உரை என்பது மிகவும் முக்கியமானது. ஜனாதிபதி திரவுபதி முர்முவை மதிக்கிறோம். இந்த ஆண்டு, பார்லிமென்டில் இரண்டு முறை ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். முதல் முறை ஆற்றிய உரை தேர்தலுக்கானது.ஜனாதிபதி உரையில், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சாதகமாக எந்த திட்டமும் இடம்பெறவில்லை. ஜனாதிபதியின் உரையில் தொலைநோக்கு பார்வையோ, வழிகாட்டுதலோ இல்லை. கடந்த முறை போலவே, இந்த முறையும் மத்திய அரசை பாராட்டும் வார்த்தைகள் ஜனாதிபதி உரையில் அதிகம் இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

காந்தி, அம்பேத்கர் சிலைகளை நிறுவுக

பார்லி., வளாகத்தில் இருந்த காந்தி, அம்பேத்கர் சிலையை அகற்றியது தொடர்பாக, ராஜ்யசபாவில் கார்கே பேசியதாவது: பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து அகற்றப்பட்ட காந்தி, அம்பேத்கர் சிலைகளை மீண்டும் பழைய இடத்தில் நிறுவ வேண்டும். இது போன்ற விவகாரங்களில் முடிவு எடுக்கும் முன், எதிர்க்கட்சித் தலைவரை உள்ளடக்கிய கமிட்டியிடம் ஆலோசிக்க வேண்டும். ஆனால் அரசு ஆலோசனை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

கண்ணன்
ஜூலை 02, 2024 06:54

நல்ல கண்ணாடி போட்டுப் பார்க்கவும்


sankaranarayanan
ஜூலை 01, 2024 23:12

இவருக்கு வயதாகிவிட்டதால் கண்பார்வை குன்றியுள்ளதாம் ஆதலால் இவருக்கு அரசியல் பூதக்கானாடி வாங்கிக்கொடுங்கள் எல்லாமே சரியாகிவிடும் நன்றாகவே தெரியும்


C.SRIRAM
ஜூலை 01, 2024 22:12

கிட்ட பார்வை கூட இல்லை .குடும்ப சொத்து எப்படி வந்தது ?


Amruta Putran
ஜூலை 01, 2024 17:01

Criminal should be kept behind bars


Srinivasan Krishnamoorthi
ஜூலை 01, 2024 16:38

கார்கே இப்போது எதிர் கட்சி தலைவர் என்ற அந்தஸ்தில் பேச பழகி உள்ளார். வாழ்த்துக்கள்.


venugopal s
ஜூலை 01, 2024 16:37

மத்தியில் ஆளும் பாஜக கட்சிக்கே தொலைநோக்குப் பார்வை இல்லாத போது அவர்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் பேச்சில் அதை எப்படி எதிர்பார்க்க முடியும்?


கண்ணன்
ஜூலை 02, 2024 06:55

ஐயா அப்படி என்ன கண்டீரோ?


subramanian
ஜூலை 01, 2024 16:05

இந்திரா காங்கிரஸ் ஆபீஸ் பக்கம் பார்த்துவிட்டு அறிக்கை விட்டிருப்பது போல் தெரிகிறது. இருண்டு கிடக்கும் இடத்தை பார்த்தால் என்ன செய்வது?


sridhar
ஜூலை 01, 2024 14:46

தூரப்பார்வை கண்ணாடி போட்டுக்கொண்டு பார் , தொலைநோக்கு பார்வை தெரியும் .


Krishnamurthy Srinivasan
ஜூலை 01, 2024 14:37

தொலை நோக்கி வாங்கி வைக்கவும்


அப்புசாமி
ஜூலை 01, 2024 14:23

தொலை நோக்கி.. நேத்திக்கி கடுன கோவில் முதல் மழைக்கே ஒழுகுது. நேத்திக்கி போட்ட ரோடு இன்னிக்கி உள் வாங்குது. இப்பல்லாம் நூறு நாளக்கி தாங்குனாலே தொலை நோக்குதான்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி