உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாஜ.,வையும், பிரதமர் மோடியையும் புகழ்ந்த ஜனாதிபதி உரை: காங்.,தலைவர் கார்கே தாக்கு

பாஜ.,வையும், பிரதமர் மோடியையும் புகழ்ந்த ஜனாதிபதி உரை: காங்.,தலைவர் கார்கே தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வை புகழும் வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரை இருந்தது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.இது குறித்து கார்கே கூறியிருப்பதாவது: ஜனாதிபதி உரையில் வேலைவாய்ப்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வை புகழும் வகையில் ஜனாதிபதியின் உரை இருந்தது. இது பிரதமர் மோடிக்கான விளம்பரம். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் உரை

காங்.,எம்.பி சசி தரூர் கூறியதாவது: ‛‛ ஜனாதிபதி தேர்தல் உரையை வாசித்துள்ளார். இது ஒருதலைப்பட்சமாக இருந்தது. நாட்டில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்து உரையில் ஏதுவும் இடம்பெறவில்லை. மக்கள் சிந்தித்து லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும்'' எனக் கூறினார்.

கடின உழைப்பு

இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது: பிரதமர் மோடி கடின உழைப்பால் நாட்டை எவ்வாறு மாற்றியமைத்தார் என்பது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மக்களிடம் எடுத்துரைக்கும் போது எம்.பி., சசி தரூர் மற்றும் காங்கிரசாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி நாட்டின் பொருளாதாரத்தை, உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Ramesh Sargam
பிப் 01, 2024 09:28

எவ்வளவோ முட்டுகொடுக்கிறது காங்கிரஸ் கட்சிக்கு. ஒருவேளை காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்றால்கூட, இவருக்கு எதற்கும் லாயக்கில்லாத ஒரு துறை அமைச்சர் பதவிதான் கிடைக்கும். சத்தியமாக காங்கிரஸ் ஜெயிக்கபோவதில்லை. ஜெயித்தாலும் இவருக்கு அந்த பிரதமர் பதவி கிடைக்காது.


D.Ambujavalli
பிப் 01, 2024 06:38

எழுதி கொடுத்ததைத்தான் படிக்க வேண்டுமென்பது கவர்னர், ஜனாதிபதி இவர்களுக்கு எழுதப்படாத அறிவுறுத்தல்


ramani
பிப் 01, 2024 05:00

கிழத்துக்கு பொறாமை. இவனுங்க ஆட்சியில் பிரதமரை புகழ்ந்தால் அது ஓகே. மோடிஜியை புகழ்ந்த பேசகைடாது அப்படிதானே. பெருசு.


நரேந்திர பாரதி
பிப் 01, 2024 03:14

அப்போ இந்திராவுக்கு ஜால்ரா போட்ட ஜாகீர் உசேன், வி. வி. கிரி, முகம்மது இதயத்துல்லா, வி. வி. கிரி, பக்ருதின் அலி அகமது, பசப்பா தனப்பா ஜாட்டி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங், ரா. வெங்கட்ராமன் இவர்களெல்லாம் இந்த லிஸ்ட்ல இல்ல போல இருக்கு?


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 01, 2024 01:01

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் சபாநாயகர் மீரா குமார், ஜனாதிபதி பிரதிபா பாட்டில் எப்படி செயல்பட்டனர் ?? இவர்கள் அந்தந்த பதவிகளை எப்படி அடைந்தனர் தெரியுமா ??


Barakat Ali
பிப் 01, 2024 12:09

மீரா குமார் ராகுலுக்கு உணவு ஊட்டும் புகைப்படம் கூட வெளியானது...


Kasimani Baskaran
ஜன 31, 2024 23:34

அதற்காக இராகுலின் நீதியாத்திரை பற்றியா குறிப்பிட முடியும்...


அப்புசாமி
ஜன 31, 2024 23:05

பாஞ்சிலட்சம் போட்டதையும், ரெண்டு கோடி வேலை குடுத்துட்டு வர்ரதையும் சொல்லவே இல்லை. எழுதிக் குடுக்கலையாம். தன்னடக்கமாம்.


Duruvesan
பிப் 01, 2024 08:45

உருது பேசுபவருக்கு ஹிந்தி புரியாது என்பது வியப்பு ஆங்கிலச் நியூஸ்பெபேர் படிச்சா எதுனா தெரியும்,முரசொலி படிக்கிறவனுக்கு இது தெரிய வாபு இல்லை


Jysenn
ஜன 31, 2024 21:46

Ivan rombataan koovuraan.


g.s,rajan
ஜன 31, 2024 21:30

பதவி படுத்தும் பாடு .....


Godfather_Senior
ஜன 31, 2024 20:24

பாவம் காங்கிரஸ்காரன் பாடு நிஜத்தை ஒப்புக்கவும் மனசு இல்லே , காங்கிரஸ் சொல்ற பொய்யெல்லாம் பட்டுனு பொசுங்குது


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி