மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
2 hour(s) ago
புதுடில்லி : 'நம் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மையமாக வைத்து, நம் நாட்டை முன்னேற்றும் பாதையை அமைத்து தந்தவர், பா.ஜ.,வின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா' என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.பா.ஜ.,வின் முந்தைய அமைப்பான பாரதிய ஜன சங்கத்தை தோற்றுவித்த தலைவர்களில் ஒருவரான தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:நம் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மையமாக வைத்து, நம் நாட்டை முன்னேற்றும் பாதையை அமைத்து தந்தவர். இதன் வாயிலாக வளர்ந்த பாரதத்தை கட்டமைப்பதில், நம் அனைவருக்கும் அவர் ஊக்கச்சக்தியாக திகழ்கிறார். குறிப்பாக, ஏழ்மை நிலையில் உள்ளவர்களை முன்னேறச் செய்வது மற்றும் சமூக ஒற்றுமையை பேணுவது போன்ற அவரது சித்தாந்தங்கள் தான், பா.ஜ., ஆட்சியை வழிநடத்தி வருகிறது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேபோல், தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவை போற்றும் வகையில், பா.ஜ., தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலர் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago