உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சம்பக் ரோபோ நாய்க்கு சிக்கல்; கிரிக்கெட் வாரியத்துக்கு நோட்டீஸ்

சம்பக் ரோபோ நாய்க்கு சிக்கல்; கிரிக்கெட் வாரியத்துக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் தோன்றும் 'சம்பக்' என்ற 'ரோபோ' நாய் தொடர்பாக, அதே பெயரிலான பத்திரிகை வழக்கு தொடர்ந்துள்ளது. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களை கவரும் விதத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் 'சம்பக்' என்ற ரோபோ நாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானத்தில் ஓடுவது, நடப்பது, கை குலுக்குவது, உட்காருவது என வீரர்கள், ரசிகர்கள், வர்ணனையாளர்கள், 'சியர் லீடர்ஸ்' உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவர்கிறது. மேலும், தலையின் முன்பக்கத்தில் கேமரா பொருத்தப்பட்டு ஒளிபரப்பு ரீதியாகவும் உபயோகமாக உள்ளது.இந்நிலையில், 'சம்பக்' என்ற பெயருக்கு எதிராக டில்லி உயர் நீதிமன்றத்தில், 'டில்லி பிரஸ் பத்ரா பிரகாஷன் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் கடந்த 1968ல் இருந்து, 'சம்பக்' என்ற குழந்தைகள் இதழை நடத்தி வருகிறது. எனவே, பிரபலமாக இருக்கும் தங்கள் பத்திரிகையின் பெயரை பயன்படுத்தி இருப்பதாக, பி.சி.சி.ஐ., எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எதிராக அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சவுரப் பானர்ஜி முன் நடந்த விசாரணையில், 'சம்பக்' பத்திரிகை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் குப்தா, 'ஐ.பி.எல்., என்பது வணிக ரீதியான வருவாய் ஈட்டும் நிகழ்ச்சி. 'எனவே, ரோபோ நாய்க்கு 'சம்பக்' என பெயர் சூட்டி இருப்பது, 'பிராண்ட்' எனப்படும் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையை மீறும் செயல். 'சம்பக்' என்ற பெயர் பிரபலமாக இருப்பதால் வணிக ரீதியான சுரண்டல் நடக்கிறது' என்றார். விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதி, 'கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் செல்லப்பெயர் சிகு. இது, சம்பக் பத்திரிகையில் இடம்பெறும் கதாபாத்திர பெயர்களில் ஒன்று. 'எனவே, அவருக்கு எதிராக, பத்திரிகை வெளியீட்டாளர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' என கேள்வி எழுப்பினார். பி.சி.சி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய் தீபக் வாதிடுகையில், ''ஒரு பூவின் பெயர் தான் சம்பக். கிரிக்கெட் பார்க்கும் மக்கள், அந்த பெயரை பத்திரிகையுடன் தொடர்புபடுத்தி பார்க்கவில்லை. ஒரு 'டிவி' தொடரின் கதாபாத்திரத்துடன் தான் தொடர்புபடுத்தி பார்க்கின்றனர்,'' என்றார். இதையடுத்து, இந்த வழக்கில் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும் படி பி.சி.சி.ஐ.,க்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
மே 01, 2025 11:55

பூனைக்கு சற்று கோபம் தான்!


அப்பாவி
மே 01, 2025 10:35

அவிங்களுக்கு என்னா காசுக்கா குறைச்சல்? ஒரு 100 கோடி உருவுங்க.


பாமரன்
மே 01, 2025 10:33

பதில் அளிக்க நாலு வாரம்னா இவிங்க தரப்பு வக்கோலுங்க கோர்ட்டில் பேசிகிட்டது என்னவாம்...??? இந்த மாதிரி சட்டம் மற்றும் கோர்ட்டு வச்சிட்டு நாம் 3000வது வருஷத்தில் கூட முன்னேறிய நாடு ஆக முடியாது


ramesh
மே 01, 2025 09:55

முதலில் இந்த கேஸ் போட்டவனின் பெயரை தெரிந்துகொண்டு அவனை விட வயதில் மூத்த அவனுடைய பெயர் உள்ளவர்கள் என் பெயரை வைத்து இருக்கிறான் என்று அனைவரும் வழக்கு தொடுக்க வேண்டும் . நீதிமன்ற வேலை நேரத்தை கெடுத்ததாக 10 கோடி வரை அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் இந்த பணத்தாசையால் வழக்கு தொடுத்தவன் மீது


Anbuselvan
மே 01, 2025 08:25

பயமா இருக்குப்பா எங்க நாய் பேர் ஜூலி. யாராவது கேஸ் போட்டுடுவாங்களோன்னு ரொம்ப பயமா இருக்கு


அன்பு
மே 01, 2025 15:48

ஒரு பூவின் பெயரை ஒருவர் தனது பத்திரிகைக்கு வைக்கிறார். இன்னொருவர் தனது பொருளுக்கு வைக்கிறார். இரண்டுமே சம்பந்தம் இல்லாத பொருட்கள். எப்படி ஒருவர் மட்டும் உரிமை கோர முடியும்?


Anbuselvan
மே 01, 2025 08:15

இதுக்கெல்லாம் ஏன் ஒரு மாத நோட்டீஸ், விளக்கம் எல்லாம்? வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதற்கு அபராதம் விதித்து கேஸ் முடிக்க வேண்டியது. நீதி துறையை சீர் செய்ய வேண்டும்


D.Ambujavalli
மே 01, 2025 06:27

குழந்தைகளுக்கு ரோஸ், சம்பகா, மல்லிகா என்று பெயர் வைக்கிறார்கள், அவர்கள் மேலும் வழக்குத் தொடர்வார்களா?


வாய்மையே வெல்லும்
மே 01, 2025 06:13

சாய் தீபக் சார்.. வாழ்க வளர்க.. உங்களோட பேச்சு எங்களுக்கு மிகவும் பிடிக்கும்


சமீபத்திய செய்தி