உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / " அந்த " முயற்சியில் ஈடுபட்ட 28 பேர்: கேரள நடிகை சர்மிளா புது குண்டு

" அந்த " முயற்சியில் ஈடுபட்ட 28 பேர்: கேரள நடிகை சர்மிளா புது குண்டு

திருவனந்தபுரம்: தன்னை இது வரை பலர் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தப்பித்து ஓடியதாகவும் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை சர்மிளா புது குண்டை போட்டுள்ளார். இது வரை 28 பேர் ' அந்த ' முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.கேரள திரையுலகில் நடிகைகள் பலர் பலாத்காரம் பிரச்னைகளால் பெரும் சிரமத்திற்குள்ளதானதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மல்லுவுட் நடிகர்கள், இயக்குனர்கள் கலங்கி நிற்கின்றனர். பல புகார் தொடர்பாக சில வழக்குகளும் பதியப்பட்டு விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q18jsb5e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் சென்னையை சேர்ந்த கேரளாவில் பல மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் சர்மிளா என்ற நடிகை பழைய சம்பவத்தை புது குண்டாக தூக்கி போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: 1997 ல் அர்ஜூனாவும் அஞ்சு புள்ளைகளும் என்ற திரைப்படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. இதற்கென அமைத்திருந்த ஒரு செட்டில் நானும் அமர்ந்திருந்தேன். அப்போது இப்பட தயாரிப்பாளர் எம்.பி.மோகனன் மற்றும் அவரது நண்பர்கள் என்னை சூழ்ந்து பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். எனது குடும்ப உறுப்பினர்கள் சிலர் உதவியால் தப்பினேன். ஒரு ஓட்டலில் தங்கி இருந்தபோது மோகனன் மற்றும் அவரது நண்பர்கள் என்னை பலாத்காரம் செய்ய வந்தனர். ஓட்டல் ஊழியர் ஒருவரும் சேர்ந்து கொண்டார். ' நோ ' என்று கதறியபடி வெளியே ஓடினேன். ஒரு ஆட்டோ டிரைவர் உதவியால் தப்பி வீட்டிற்கு சென்றேன். நான் தப்பித்து விட்டேன் ஆனால் ஏழை நடிகைகள் பலர் இது போன்ற தொல்லையில் இருந்து தப்புவது பெரும் சிரமம். வெளியே சொன்னால் அவமானம், எனது குடும்பத்தினருக்கு பாதிப்பு வரும் என்று அப்போது சொல்லவில்லை.

அந்த ' அட்ஜஸ்மென்ட் '

இது போல் மற்றொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதாவது பரினயம் என்ற திரைப்பட ஷூட்டிங்கின் போது இயக்குநர் ஹரிஹரன், நடிகர் விஷ்ணு என்பவர் மூலம் சர்மிளா அந்த ' அட்ஜஸ்மென்ட் ' பண்ணுவாரான்னு கேட்டார். நான் நோ சொன்னேன். உடனே படபிடிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டேன். பெண்கள் பணியாற்ற முடியாத நிலை கேரள திரையுலகில் உள்ளது . இது போல் 28பேர் வரை ' அந்த ' முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நடிகை சர்மிளா கூறியுள்ளார். இது தொடர்பாகவும் கேரள போலீசார் விசாரணையை துவக்குவார்கள் என தெரிகிறது. நாள்தோறும் ஒரு நடிகை பாலியல் புகாரால் கேரள திரையுலம் திகைத்து நிற்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

RAMAKRISHNAN NATESAN
செப் 01, 2024 20:00

இருபத்தி எட்டா ???? சிதைஞ்சு சின்னாபின்னம் ஆயிராது ????


J.Isaac
செப் 01, 2024 19:05

காதல் காட்சியில் நடிக்கும் ஆணும் பெண்ணும் கட்டி அணைத்து தானே ஆகனும். அது தப்பு தானே. சினிமா தொழில் பாலியல் தொல்லை நிறைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. சமுதாய ஒழுக்க சீர் கேட்டுக்கு சினிமாவும் ஒரு காரணம் தானே.


theruvasagan
செப் 01, 2024 18:53

இதுவரைக்கும் சம்பவம் நடந்த உடனே இந்த அவமானத்தை பொறுக்க முடியாமல் தன்னுடைய பாதிப்பை வெளியிட்ட நபர் என்று எத்தனை பேரை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஆறி அவலாகிப் போன பிறகு குற்றச்சாட்டை வைத்தால் மானமா மார்கெட்டா எதை பிரதானமாக கருதுகிறார்கள் என்கிற கேள்விதானே எழுகிறது.


Ram pollachi
செப் 01, 2024 18:28

குளிக்க போன ஸ்ரீதேவி? அடுத்த பாய்ச்சல் ஷேக் கை நோக்கியா?


Sck
செப் 01, 2024 16:47

சரிமா நீ சொல்றத நம்பிட்டோமுனே வச்சுக்க, ஆனா எனக்கு ஒரு சின்ன டவுட்டு, ஒரு ஆட்டோல ஏறி வீட்டுக்கு தப்பி ஓடிட்ட சரி, ஆனா ஆட்டோல போற தூரம்தான் உன் வீடுனா, ஒட்டல்ல ஏன் ரூம் போட்டு தங்குன? ஒரு ஆளா வருவான் ஆட்டய போடலானு பாத்தேன், ஆனா அந்த தயாரிப்பாளர் உன்ன மாதிரி எத்தன நடிகைகளோடு படுத்திருப்பான். எத்தன சினிமாகாரிங்க அவனுக்கு அல்வா குடுத்திருப்பாளுங்க. அதான் படையோடு வந்திருப்பான். கூட்டத்த பாத்ததும் நீ அப்பீட்டு ஆயிட்ட.இப்ப இங்க வந்து நான் பத்தினி தெய்வம்,எனக்கு ஆம்பள வாசனை ஆகாதுனு பீலா விடுற.


Kasimani Baskaran
செப் 01, 2024 16:21

ஜொள்ளர்கள் நிறைந்த சினிமா உலகம்.


Ram pollachi
செப் 01, 2024 15:33

இந்த வருடம் எல்லோருக்கும் தேசிய விருது கொடுத்து அசத்துங்கள்.


தமிழ்வேள்
செப் 01, 2024 14:09

ஒருமுறை ஆபத்திலிருந்து தப்பிய நடிகை பிறகு ஏன் மீண்டும் மீண்டும் அதே ஆபத்தை நாடி தேடி ஓட வேண்டும்? ஆபத்தின் மீது ஆசையா அல்லது அதனால் வரும் வருமானமா?


Sck
செப் 01, 2024 16:48

வருமானமே.


sridhar
செப் 01, 2024 13:29

இவ்வளவு ஆபத்துகள் இருக்கும் துறையில் தொடர்ந்து இருக்கும் பெண்கள் என்ன நினைப்பில் இருக்கிறார்கள்.


கத்தரிக்காய் வியாபாரி
செப் 01, 2024 13:22

மோகன்லாலை உள்ள தூக்கிப்போட்டு முட்டிக்கு முட்டி தட்டினால் எல்லா பயலும் அடங்குவானுக.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை