மேலும் செய்திகள்
பேட்டரி சேமிப்பு மையங்களுக்கு அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பு
59 minutes ago
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
1 hour(s) ago
பெங்களூரு : கர்நாடகாவை சேர்ந்த ஆறு பா.ஜ., - எம்.பி.,க்களின் சொத்து மதிப்பு, 15 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்குவதால், எம்.பி.,க்களின் சொத்து மதிப்பு குறித்து, ஏ.டி.ஆர்., எனும், 'அசோசியேஷன் பார் டெமாக்ரடிக் ரிபார்ம்ஸ்' ஆய்வு செய்துள்ளது. இதில், கர்நாடகாவின் ஆறு எம்.பி.,க்களின் சொத்து மதிப்பு, 15 ஆண்டுகளில், பல மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.வேட்பு மனு தாக்கல் செய்த போது, வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் குறிப்பிடப்பட்ட சொத்து விபரம், தற்போது இவர்களிடம் வைத்துள்ள சொத்துகளின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.இதன்படி, விஜயபுரா பா.ஜ., - எம்.பி., ரமேஷ் ஜிகஜினகியின் சொத்து அளவு, 9,098 சதவீதம் அதிகரித்துள்ளது. தாவணகரே எம்.பி., சித்தேஸ்வரின் சொத்து மதிப்பு 656 சதவீதம், பெங்களூரு வடக்கு எம்.பி., சதானந்தகவுடாவின் சொத்து மதிப்பு 4,413 சதவீதம்.தார்வாட் எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான பிரஹலாத் ஜோஷியின் சொத்து அளவு 1,335 சதவீதம், உத்தரகன்னடாவின் அனந்தகுமார் ஹெக்டேவின் சொத்து 6,928 சதவீதம், பாகல்கோட்டின் கத்திகவுடாவின் சொத்து மதிப்பு 718 சதவீதம் அதிகரித்து உள்ளது.
59 minutes ago
1 hour(s) ago