உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; கோவிலை இடித்த மர்ம நபர்கள்

 மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; கோவிலை இடித்த மர்ம நபர்கள்

பெங்களூரு: பெங்களூரு அருகே, மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால், இரவோடு இரவாக ஆஞ்சநேயர் கோவிலை மர்ம நபர்கள் இடித்து தள்ளினர். கர்நாடக மாநிலம், பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் தாலுகா நந்தகுடி கிராமத்தில், ஆஞ்சநேயர் கோவில் இருந்தது. இங்கிருந்து, 100 மீட்டர் துாரத்தில் மதுக்கடை திறக்க ஒருவர், கலால் துறையிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், கோவில் அருகே மதுக்கடை திறக்க கோவில் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கிராம மக்களும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், கோவிலையும், ஆஞ்சநேயர் சிலையையும் பொக்லைன் இ யந்திரம் மூலம், மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு இடித்து தள்ளினர். நேற்று காலை நடைபயிற்சி சென்ற மக்கள், கோவில் இடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த நந்தகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால், கோவிலை சிலர் இடித்ததாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர். இதுதொடர்பாக நந்தகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை