உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.1600 கோடி போதாது… ரூ.20,000 கோடி வெள்ள நிவாரண நிதி வேண்டும்: மத்திய அரசிடம் கேட்கும் பஞ்சாப்

ரூ.1600 கோடி போதாது… ரூ.20,000 கோடி வெள்ள நிவாரண நிதி வேண்டும்: மத்திய அரசிடம் கேட்கும் பஞ்சாப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் ரூ.20,000 கோடி நிதி தரவேண்டும் என்று மத்திய அரசை, பஞ்சாப் வலியுறுத்தி இருக்கிறது.முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பஞ்சாபில் கனமழை, வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்பில் சிக்கி தவிக்கின்றனர்.மீட்புப் பணிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டு இருந்தாலும் மக்கள் இன்னமும் இயல்பு வாழ்க்கை நோக்கி நகர இயலாமல் உள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பிரபலங்கள் நிவார பணிகளில் இறங்கி உள்ளனர். மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 1600 கோடி நிதியை அறிவித்துள்ளது.இந் நிலையில் இந்த நிதி போதாது, மத்திய அரசு ரூ. 20,000 கோடி சிறப்பு நிவாரண நிதியை அறிவிக்க வேண்டும் என்று பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி அரசு வலியுறுத்தி இருக்கிறது. இன்று (செப்.26) தொடங்கிய சட்டசபை சிறப்புக் கூட்டத்தொடரில் வெள்ளபாதிப்பு தொடர்பான விவாதத்தின் போது இதுதொடர்பான தீர்மானம் அவையில் முன்மொழிப்பட்டுள்ளது.நீர்வளத்துறை அமைச்சர் பரீந்தர் கோயல் இதுதொடர்பான தீர்மானம் ஒன்றை அவையில் கொண்டு வந்தார். தற்போது ஏற்பட்டுள்ள பேரழிவானது 1955ம் ஆண்டு மற்றும் 1978ம் ஆண்டுகளில் ஏற்பட்டு இருப்பதை விட மிகவும் மோசமானது, ஐந்து லட்சம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வீணானது, ஈடுசெய்ய முடியாத சேதம் ஏற்பட்டுள்ளதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, பாஜ தலைமையிலான மத்திய அரசு, ரூ,20,000 கோடி சிறப்பு நிவாரண நிதியை அறிவிக்க வேண்டும். மேலும் பிரதமர் அறிவித்த ரூ.1600 கோடி நிதியும் இன்னமும் மாநில அரசின் கருவூலத்துக்கு வந்து சேரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
செப் 26, 2025 19:45

பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், தெலுங்கானாவிற்கு கொடுக்கும் நிதி ஊழல் செய்யப்படும். கொடுக்காமல் இருப்பதே நலம். கொஞ்சநாளில் மக்கள் அவர்களே சரியாகிவிடுவார்கள். ஊழல் அரசியல்வாதிகளிடம் பணம் கொடுப்பதும் கொடுக்காததும் ஒன்று தான்.


Rathna
செப் 26, 2025 18:31

இலவசங்களை கொடுத்து நாசமா போன மாநிலங்களில் பஞ்சாபி ஒரு முக்கிய சாட்சி. இந்த இலவசங்களுக்காக பங்களாதேஷி, பாக்கிஸ்தான் மூர்கத்தினர் அதிக அளவில் அங்கே குடி இருக்கின்றனர். உள்ளூர் பஞ்சாபி சீக்கியர்கள், அவர்கள் மாநிலத்திலேயே சில பகுதிகளில் சிறுபான்மை ஆகி உள்ளனர். பஞ்சாபி முதல்வர் டிவி விளம்பரத்தில் வந்து, ஒரு ரூபாய் இருந்தாலும் பஞ்சாப் மாநிலத்திற்கு கொடுங்கள் என்று பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து இருக்கிறது.


sankaranarayanan
செப் 26, 2025 17:32

கொடுத்ததை வாங்கிக்கொண்டு பேசாமல் போனால் நல்லது இல்லையென்றால் அதுவும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்றாகிவிடும் என்ன விளையாட்டா கேப்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா வாய்க்கு வந்ததை கேட்டால் அதுவும் கிடைக்காது


என்றும் இந்தியன்
செப் 26, 2025 17:16

Punjab Expenditure excluding debt repayment in 2025-26 is estimated to be Rs 1,46,632 crore ??? ஆனால் இவர்களுக்கு ரூ 20,000 கோடி வெல்ல / வெள்ள நிவாரண நிதி??? இதை வைத்து காலிஸ்தான் மற்றும் சொரிவாளுக்கு பங்கு போகுமா அதுக்குத்தான் இவ்வளவு கோடியா??? ஆனால் சேதாரம் ரூ 1600 கோடி என்று மத்திய அரசு கணக்கு போட்டால் இவர்களுக்கு ரூ 20,000 கோடி வேண்டும்???


Indian
செப் 26, 2025 15:47

வாய்ப்பில்லை , குஜராத் நா கிடைத்திருக்கும்


Kumar Kumzi
செப் 26, 2025 17:06

பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா கருத்து சொல்லுறான்யா


vijay
செப் 26, 2025 17:15

நீ வாங்குற 200 ரொவாய் காசுக்கு அதிகமா 2000 ரொவாய் கேட்டுப்பாரு, நிச்சயம் கிடைக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை