உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புஷ்பக் ஏவுகலன் சோதனை: இஸ்ரோவுக்கு இந்திய விமானப்படை பாராட்டு

புஷ்பக் ஏவுகலன் சோதனை: இஸ்ரோவுக்கு இந்திய விமானப்படை பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்துசென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றதற்கு, இஸ்ரோவை இந்திய விமானப்படை பாராட்டி உள்ளது. விண்வெளியில் செயற்கைக்கோளை நிலை நிறுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில், ஆர்.எல்.வி., புஷ்பக் என்ற ராக்கெட்டை ஏற்கனவே இரண்டு முறை இஸ்ரோ சோதனை செய்திருந்தது. இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா உள்ள ஏவுத்தளத்தில், இன்று (ஜூன் 23) காலை 7.10 மணிக்கு 3வது முறையாக, சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s91l9ie5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் மூலம், செயற்கை கோள்களையோ அல்லது விண்கலன்களையோ விண்ணுக்கு சுமந்து செல்லகூடிய ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில், ஏவுகலன் திட்ட பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளது. இஸ்ரோவை இந்திய விமானப்படை பாராட்டி உள்ளது. இது குறித்து, இந்திய விமானப்படை புகைப்படங்களை எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற பல வெற்றிகரமான மைல்கற்களை அடைய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

P. VENKATESH RAJA
ஜூன் 23, 2024 18:45

இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள்


P. VENKATESH RAJA
ஜூன் 23, 2024 18:44

இஸ்ரோ தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது ஆதித்யா, சந்திரயான் 3 என எண்ணற்ற சாதனை சொல்லிக் கொண்டே போகலாம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை