உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் குடியுரிமை : டில்லி ஐகோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

ராகுல் குடியுரிமை : டில்லி ஐகோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா எதிர்கட்சி தலைவரும், காங். எம்.பி.யுமான ராகுல் குடியுரிமைக்கு எதிராக பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் காங். கட்சியைச் சேர்ந்த ராகுல், பிரிட்டன் குடியுரிமை பெற்று அந்நாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ளார். இது 1955 மக்கள் பிரிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு எதிரானது, அவரது இந்திய குடியுரிமையை பறிக்க வேண்டும் என கூறியிருந்தார்.https://www.youtube.com/embed/UWqR2T8gm7kஇந்த கடிதத்தின் அடிப்படையில் சுப்ரமணிய சுவாமி சார்பில் வழக்கறிஞர் சத்யா சபர்வால், டில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்குடன் பிரிட்டனில் இயங்கி வரும் பேக்கூப்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கடந்த 2003-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி பெற்றுள்ள கடிதம் சமர்பிக்கப்பட்டது.அந்த கடிதத்தில் காங். எம்.பி. ராகுல், பேக்ஓப்ஸ் லிமிடெட் என்ற பிரிட்டன் நிறுவனத்தின் இயக்குனர், மற்றும் செயலராக உள்ளார். இந்நிறுவனம் கடந்த 2005-06ம் ஆண்டு தாக்கல் செய்த வருடாந்திரா அறிக்கையில் நிறுவனத்தின் இயக்குனரான ராகுல் குறித்த தகவலில் 1970-ம் ஆண்டு ஜூன் 19-ம் ஆண்டு ராகுல் பிறந்த தேதியுடன், குடிமகன் என்ற இடத்தில் பிரிட்டன் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம் ராகுல் இந்திய குடிமகன் என கூறிக்கொண்டு, பிரிட்டன் குடியுரிமை இன்றுவரை வகித்து வந்துள்ளார். இது குறித்த மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. இது அரசியமைப்பு சட்டத்திற்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கும் எதிரானது. அவரது குடியுரிமை குறித்து தற்போதைய நிலை என்ன என விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். என கூறியிருந்தார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு ராகுல் இரட்டை குடியுரிமை பெற்றவர். அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

TSRSethu
ஆக 17, 2024 11:28

அவ்வப்போது சில சென்சிட்டிவ் விஷயங்களை சுவாமி கிளப்புவார். கிளருவார். ஒன்னும் நடக்காது. நாமும் மறந்து விடுவோம்.


venugopal s
ஆக 17, 2024 11:26

இது உண்மை என்றால் கடந்த பத்து வருடங்களாக உள்துறை அமைச்சகமும் அதன் அமைச்சர் அமித்ஷாவும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டு இருக்கின்றனரா?


nv
ஆக 17, 2024 09:40

முதலில் கைது செய்யவும்


Kathiresan
ஆக 17, 2024 01:59

ஏன் ஐயா நீங்களே உளரிக் கொட்டி மாட்டிக் கொள்கிறீர்கள்.


ஆரூர் ரங்
ஆக 16, 2024 22:32

இட்டாலி நாட்டு சட்டப்படி ஒருமுறை பெறப்பட்ட இட்லி கடவுச்சீட்டை கேன்சல் செய்து விட்டு வேறு நாட்டுக் குடிமகன் ஆக முடியாது. இந்தியச் சட்டப்படி வேறு நாட்டு கடவுச்சீட்டு வைத்திருந்தால் அதனை அந்நாட்டு அரசிடம் திருப்பியளித்துவிட்டு அதன் பின்னர்தான் இந்தியக் கடவுச்சீட்டு பெறமுடியும். இந்த விதிகளின்படி சோனியா கூட நேர்மையான முறையில் இந்திய கடவுச்சீட்டு பெற்றிருப்பார் என நம்ப முடியவில்லை.


Ramesh Sargam
ஆக 16, 2024 22:32

ராகுல் மீது எத்தனை வழக்குகள். ஒன்றும் நடப்பதில்லை. ஒன்றும் முடிவுக்கு வருவதில்லை. முடிவுக்கு வராமல் ராகுலை தண்டிக்கமுடியாது. நிலைமை இப்படி இருக்கையில், நீதிமன்றம் எப்படி மேலும் மேலும் ராகுல் மீது வழக்கு பதிவுசெய்தாலும் ஏற்றுக்கொள்கிறது?


மோகன்
ஆக 16, 2024 22:24

இங்கு பிரிட்டன் குடியுரிமை வாங்க வேண்டும் என்றால் இந்திய குடியுரிமையை நம் இந்திய அயலகத்தில் இங்கு சரண்டர் செய்ய வேண்டும். மேலும், பிரிட்டன் குடியுரிமை பெற்ற பின் இந்திய பாஸ்போர்ட்டில் பயணம் செய்வது கிரிமினல் குற்றமாகும்.


வைகுண்டேஸ்வரன்
ஆக 16, 2024 21:53

என் மாமா பையன் கூட இரட்டை குடிமகன் சர்டிபிக்கேட், ஜெர்மன் அண்ட் இந்தியன் வைத்திருக்கிறான். இங்கே அவனுக்கு ஆதார், பான், வோட்டர் ஐ டி கார்டு களும், டிரைவிங் லைசென்சும் கூட வைத்திருக்கிறான். இதெல்லாம் சட்டபூர்வமானது தான். சு சாமி க்கும் வேற வேலை இல்லை. நீதிமன்றத்துக்கும் போரடிக்குது போல. 6 வருட பழைய கேஸை தூசு தட்டி எடுக்குது. கொஞ்ச நாள் செம காமெடியா இருக்கப் போகுது.


ஆரூர் ரங்
ஆக 16, 2024 22:21

சரியாக விசாரியுங்கள். இரட்டைக் குடியுரிமை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே கிடையாது. கடவுச்சீட்டு சட்டமும் தெளிவாக உள்ளது.


rama adhavan
ஆக 16, 2024 22:59

முடியவே முடியாது. இந்தியா அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 5இன் படி இந்திய குடிமகன் இரட்டை குடி உரிமை பெறுவது தடை செய்யப் பட்டுள்ளது.


Vasu
ஆக 17, 2024 00:21

நீங்க போய் Ministry of Home Affairs ல போய் சொல்லுங்க உங்க மாமா பையன் இந்தியா மற்றும் ஜேர்மன் பாஸ்போர்ட் வச்சிருக்கான் அப்படின்னு. அவங்க என்ன சொல்லறாங்கன்னு அப்புறம் வந்து சொல்லுங்க. India doesnot allow dual citizenship. ஆதார், பான், வோட்டர் ஐ டி கார்டு களும், டிரைவிங் லைசென்சு எல்லாம் illega. ஒண்ணும் தெரியாம உருட்டாதிங்க


Kumar Kumzi
ஆக 17, 2024 02:15

ஐயா ஒனக்கு யாரு இந்த கதையை சொன்னது இந்திய அரசாங்கம் இரட்டை குடியுரிமையை தடை செய்துள்ளது இலங்கை போன்ற நாடுகளில் நடைமுறையில் இருக்கு


Parthasarathy
ஆக 16, 2024 21:42

இரட்டை குடியுரிமை நாம் எந்த நாட்டுடனும் வைத்து கொள்ளவில்லை. அதனால் அனுமதியும் இல்லை. அப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் , உதாரணமாக இங்கிலாந்து, அந்த நாடும் நமக்கு அனுமதி தர வேண்டும். நம் நாடும் அதற்கு ஒப்பந்தத்தில் கை எழுத்து இட வேண்டும். சும்மா இல்லை. நாம் வேறு ஒரு நாட்டில் பாஸ்போர்ட் வைத்து இருந்தால் அந்த நாட்டு பிரஜை ஆவோம். அப்படி என்றால் நாம் இந்தியா நாட்டு குடியுரிமை வைத்து கொள்ள முடியாது.


rama adhavan
ஆக 16, 2024 23:04

நமது அரசியலமைப்பு சட்டத்தில் இரட்டை குடியுரிமை பிரிவு 5இல் தடுக்கப் பட்டுள்ளது. எனவே ஒப்பந்தம் எல்லாம் போட முடியாது.


ராமகிருஷ்ணன்
ஆக 16, 2024 21:34

ஆதாரம் இல்லாமல் சுவாமி வழக்கு போட மாட்டார். இப்போது இல்லாவிட்டாலும் நிச்சயம் ராகுல்காந்திக்கு சங்கடம் ஏற்படும் நிலை வரும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ