உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெயில் தாங்க முடியல: தலையில் தண்ணீர் ஊற்றிய ராகுல்

வெயில் தாங்க முடியல: தலையில் தண்ணீர் ஊற்றிய ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ருத்ராபூர்: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், பிரசாரத்தின்போது வெயில் தாக்கத்தால் தனது தலையில் தண்ணீர் ஊற்றினார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.லோக்சபா தேர்தலின் இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 1ல் நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில் உத்தர பிரதேசத்தின் ருத்ராபூரில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாவது: நாம் ஒவ்வொருவரும் பயாலஜிக்கல் முறையில் பிறந்துள்ளோம். ஆனால் பிரதமர் மோடி மட்டும் பயாலஜிக்கல் முறையில் பிறக்கவில்லை என்கிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nz82bf1h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அம்பானிக்கும், அதானிக்கும் உதவுவதற்காகதான் பரமாத்மா அவரை அனுப்பியுள்ளார், ஏழைகள், விவசாயிகளுக்கு உதவுவதற்காக அல்ல. உண்மையில் பரமாத்மா மோடியை உலகிற்கு அனுப்பியிருந்தால் அவர் ஏழைகள், விவசாயிகளுக்கு உதவியிருப்பார். இவ்வாறு அவர் பேசினார்.

தலையில் தண்ணீர்

வட மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், உ.பி., பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ராகுல் பேசுகையில், இடையே தண்ணீர் பாட்டிலை எடுத்து சிறிதளவு குடித்தார். தொடர்ந்து வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல், தனது தலையில் தண்ணீரை ஊற்றினார். இதனை கண்ட தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Lion Drsekar
மே 29, 2024 11:01

கொளுத்தும் வெய்யிலில் அமர்ந்திருக்கும் வாக்காளர்கள் முன்னால், இவரை சுற்றி மின்சார விசிறி, குளிர்சாதனை பெட்டி இருந்தும் இப்படி குழந்தைத்தனமாக பாட்டிலில் உள்ள நீரை தலையில் ஊற்றிக்கொள்வது பிரதமராகவேண்டும் என்று ஆசைப்படும் ஒருவர் நடந்துகொள்வது எப்படி இருக்கும். புரட்சி செல்வி, புரட்சி தலைவர், என் டி ராமாராவ் போன்றோரும் நடிகர்கள்தான் ஆனால் அரசியல் மேடையில் அவர்கள் ஒரு கட்சியின் தலையாகவே நடித்தார்கள். எங்குமே நடிகர்கள் போல் கடைசிவரை நடித்ததே இல்லை, வந்தே மாதரம்


Azar Mufeen
மே 29, 2024 09:18

அது இங்கு உள்ள புத்திசாலி அண்ணாமலை கூறுவார்


theruvasagan
மே 29, 2024 08:44

கட்சியோட எதிர்காலத்துக்கு ஒரேயடியாக தலை முழுகியாச்சு என்பதை சிம்பாலிக்காக சொல்லுகிறாரோ.


J.V. Iyer
மே 29, 2024 02:37

பாப்பு தத்தியின் இல்லாத மூளை எப்படி சூடானது என்று வியப்பாக உள்ளது.


Anbuselvan
மே 28, 2024 23:43

இப்படி கொளுத்துற வெய்யிலுக்கு மோடி அரசுதான் காரணம் என கூறுவாரா?


Pandi Muni
மே 28, 2024 22:19

தண்ணிய தலையில ஊத்தி என்னத்துக்கு ஆகப்போகுது. கிறுக்குப்பய மண்டையில எலுமிச்சம்பழத்தியில்ல வச்சி தேய்க்கணும்.


sankaranarayanan
மே 28, 2024 21:25

பப்பு தலையில் ஊற்றிக்கொண்டது எந்த தண்ணிர் மக்களே


முருகன்
மே 28, 2024 21:10

வெயில் தாங்க முடியாமல் தான் ஒருவர் தமிழகம் வரப்போகிறார்


Ramona
மே 28, 2024 20:53

கடுமையான வெயிலுக்கு மோடியை காரணம் காட்டுவார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கடுமையான கோடைகாலம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு, தொழிற்சாலைகளுக்கு, 3 மாதம் விடுமுறை, வீட்டுக்கு ஒரு 2 டன் ஏ ஸி இலவசமாக வழங்கப்படும். என்று வாக்குறுதி வரும்.


ديفيد رافائيل
மே 28, 2024 20:46

இதே தான் மக்கள் வருடம் முழுக்க அனுபவிக்கின்றனர். 18 degree air conditioner ல இருக்குற இவனுக்கு என்ன கஷ்டம். ஏதோ election க்கு அலயுற நேரம் மட்டும் தான் இப்படி


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை