உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாதாரண சலூன் கடையில் தாடியை ‛‛டிரிம் செய்து கொண்ட ராகுல்

சாதாரண சலூன் கடையில் தாடியை ‛‛டிரிம் செய்து கொண்ட ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரேபரேபலி: காங். எம்.பி. ராகுல் ரேபரேலியில் சாதாரண சலூன் கடைக்கு சென்று தாடியை ‛‛டிரிம்'' செய்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.லோக்சபா தேர்தலில் உ.பி. மாநிலம் ரபரேலி தொகுதியில் காங்., எம்.பி., ராகுல் போட்டியிடுகிறார்.இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்தார். தீவிர பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட வேட்புமனு செய்துள்ளார். இந்நிலையில் (15.05.2024) ரேபரேலியில் உள்ள சாதாரண சலூன் கடைக்கு திடீரென சென்ற ராகுல், தனக்கு லேசாக முகச்சவரம் செய்துமாறு அங்கிருந்த கடை உரிமையாளரிடம் கூறினார். உடனே அவரும் ராகுலை நாற்காலியில் அமரவைத்து அவரது தாடியை ‛‛டிரிம்'' செய்தார். பின்னர் அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Lion Drsekar
மே 16, 2024 13:49

சுதந்திரம் அடைந்த நாள் முதல் தேர்தல் ன்று வந்தால் இப்படித்தான் அரசியல் தலைவர்கள் நடந்து கொள்வார்கள் திரு லல்லூ அவர்கள் நடை பாதைகளில் வசிக்கும் ஏழைக்குழந்தைகளுக்கு முடிதிருத்துவார், தோசை சுடுவார்கள், நடனம் ஆடுவார்கள், தேர்தல் முடிந்த பின்பு எல்லா தலைவர்களும் மக்களை அடியோடு மறந்து விடுவார்கள் நாம்தான் மூன்றாம்பிறை கமலஹாசன் இரயில் நிலையத்தில் தன்னை மறந்த அந்த பெண் முன்பு கதறியது போல் என்ன சாகசம் செய்தாலும் எதுவும் நடக்காது நம்மை அவர்கள் ட்ரிம் செய்து விடுவார்கள் வந்தே மாதரம்


Narayanan
மே 16, 2024 12:51

தேர்தல் சமயத்தில் இதெல்லாம் நடக்கும்


Raa
மே 16, 2024 10:35

நாடு நல்லரசு வல்லரசு ரேஞ்சுக்கு போய்க்கொண்டிருக்கும் போது இதெல்லாம் ஒரு செய்தி என்று வெளியிடும் தினமலரை வன்மையாக கண்டிக்கிறேன்


முருகன்
மே 16, 2024 09:46

இதனை செய்வதற்கு நாட்டில் ஒருவருக்கு மட்டுமே உரிமை உள்ளது ராகுல் செய்தால் நாடகம் அப்படி தானே


late Sivaraman
மே 16, 2024 07:24

should have social and moral responsibilities. Please avoid publishing such third rated news such as the present one. This is applicable to entire media.


GMM
மே 16, 2024 07:15

முன்பு தெருவை கூட்டி படம் பிடித்து திமுக வென்றது ராகுல் தெருகடையில் டீ, பஸ்ஸில் பயணம், சாதாரண சலூனில் டிரிம் போன்ற நாடகம் எடுபடும் காலம் இதுவல்ல தேசிய வளர்ச்சி கொள்கை தேவை


Syed ghouse basha
மே 16, 2024 01:29

ராகுல்ஜி ஏழைகளின் தலைவர் எல்லோர்க்குமான தலைவர் மதம் மற்றும் மனித ஒற்றுமைக்கான தலைவர் வருங்காலஇந்திய வளர்ச்சிக்கான ஒரே தலலைர் வாழ்க ராகுல்ஜி


ஆரூர் ரங்
மே 16, 2024 09:02

இட்டாலி யிலா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை