உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமேதியில் போட்டியிட ராகுலுக்கு பயம்: பிரதமர் மோடி

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு பயம்: பிரதமர் மோடி

கோல்கட்டா: ‛‛ அமேதியில் போட்டியிட பயந்து காங்கிரஸ் இளவரசர்(ராகுல்) ரேபரேலியில் போட்டியிடுகிறார் '' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.மேற்கு வங்க மாநிலம் பர்தமான் - துர்காபூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: எதிர்க்கட்சிகளால் வளர்ச்சியை கொண்டு வர முடியாது. ஓட்டுக்காக சமூகத்தை பிரிப்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும். ஹிந்துக்களை 2 மணி நேரத்தில் ஆற்றில் வீசுவேன் என திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பேசுகிறார். என்ன மாதிரியான அரசியல் கலாசாரம் இது? மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்கு என்ன நடக்கிறது? மாநிலத்தில் ஹிந்துக்களை இரண்டாம் தர மக்களாக திரிணமுல் காங்கிரஸ் நடத்துகிறது.காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைவருக்கு தேர்தலில் போட்டியிட தைரியமில்லை. ஓடிவிடுவார் என பார்லிமென்டில் பேசினேன். தற்போது அவர், ராஜஸ்தான் சென்று அங்கிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இளவரசரும் வயநாட்டில் தோல்வி அடைவார் என ஏற்கனவே கூறியிருந்தேன். அங்கு தேர்தல் முடிந்ததும், அவர் வேறு தொகுதியை தேடுவார் எனவும் கூறினேன். தற்போது, அவரும் அமேதியில் போட்டியிட பயந்து ரேபரேலி நோக்கி ஓடியுள்ளார். நான் அவர்களிடம், ஓடவும் வேண்டாம், பயப்படவும் வேண்டாம் என கூற விரும்புகிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

நரேன்
மே 04, 2024 08:22

எப்பிடி பேசிக்கிடிருந்த நான் இப்புடி பேச ஆரம்பிச்சுட்டேன்...


Narayanan Muthu
மே 03, 2024 19:58

Why BJP shied away from fielding Lok Sabha candidates in Naya காஷ்மீர் இது பயமா இல்லை பம்முவதா காஷ்மீரில் நாங்கள்தான் கழட்டினோம் என மார்தட்டி கொண்ட இன்ச் ஏன் பயந்து ஓடுது


Syed ghouse basha
மே 03, 2024 19:55

பழைய நினைப்புதான் பேராண்டி பழைய நினைப்புதான்


Narayanan Muthu
மே 03, 2024 19:49

ராகுலை கண்டு மோடிக்கு பயம் தனது பதவியின் அதிகாரத்தின் மூலம் ராகுலின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுத்து நிறுத்திட செய்த சதி புஷ்வாணம் ஆனதால் இப்படி பிதற்றுகிறார் வரும் ஜூன் நான்காம் தேதியில் இவரின் பிதற்றல் இன்னும் அதிகமாகும்


பொ.ஜெயராஜ், பாம்பனார், இருக்கி மாவட்டம், கேரளா .
மே 03, 2024 19:24

ராகுல்காந்தி வயநாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்துடன் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக ராகுலை கிண்டல் செய்பவர்கள், மோடியும் முன்பு, 2 தொகுதிகளில் போட்டியிட்டவர் தான் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.


Mario
மே 03, 2024 16:52

இவருக்கு மணிப்பூர் போக பயம்


Narayanan Muthu
மே 03, 2024 19:42

manipur phobia


MADHAVAN
மே 03, 2024 16:15

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பிரதமர் மோடிக்கு பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது இதனால், ஆந்திராவில் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தயக்கம்


Raja
மே 03, 2024 15:01

தமிழகத்தில் போட்டியிட உங்களுக்கு பயம்


ஆரூர் ரங்
மே 03, 2024 14:52

ராய் பரேலி தொகுதிக்கு தான் செய்த சேவைகளுக்காக மக்கள் தந்த தோல்வி இந்திராவை ஆந்திரா கர்நாடகாவுக்கு ஓட வைத்தது. இப்போ குடும்பமே ஸ்டேட் ஸ்டேட்டா ஓடுது. ஓடினேன் ஓடினேன்( அரசியல்) வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடுறோம் .


shanmugaraja
மே 03, 2024 15:50

பகல் கனவு பலிக்காது தம்பி மோடி தான் ஒட porar


திகழ்ஓவியன்
மே 03, 2024 14:08

பாவம் தலைவர் பயந்து விட்டார்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி